மோதலுக்கு பயன்படுத்த ஈட்டி தயாரித்து கொடுத்தவர் கைது

Added : செப் 02, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்-மோதலின்போது பயன்படுத்துவதற்காக ஈட்டி தயாரித்த மூன்று மீனவர்கள் மற்றும் தயாரித்து கொடுத்த பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.சுருக்கு வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக, கடந்த 28ம் தேதி வீராம்பட்டிணம் - நல்லவாடு, வம்பா கீரப்பாளையம் மீனவர்கள் ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டனர். மோதல் தொடர்பாக 900 மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

அரியாங்குப்பம்-மோதலின்போது பயன்படுத்துவதற்காக ஈட்டி தயாரித்த மூன்று மீனவர்கள் மற்றும் தயாரித்து கொடுத்த பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சுருக்கு வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக, கடந்த 28ம் தேதி வீராம்பட்டிணம் - நல்லவாடு, வம்பா கீரப்பாளையம் மீனவர்கள் ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டனர். மோதல் தொடர்பாக 900 மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மோதலின்போது, ஈட்டி, சுளுக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். இந்த ஈட்டிகளை தயாரித்துக் கொடுக்கும் நபர்களை பிடிக்க, தெற்கு எஸ்.பி., (பொறுப்பு) ஜிந்தா கோதண்டராமன் உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, தனசெல்வம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் இளவரசன், ரமேஷ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மரப்பாலம் நுாறடி சாலை, சிவா விஷ்ணு நகரில் உள்ள ஒரு பட்டறையில் ஈட்டி தயாரிப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.போலீசார் அங்கு சோதனை செய்ததில் 270 ஈட்டிகள் தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், வீராம்பட்டிணத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள், 'ஆர்டர்' கொடுத்ததன்பேரில் தயாரித்தது தெரிய வந்தது. மோதலின்போது பயன்படுத்துவதற்காக, இவை தயாரிக்கப்பட்டதும் தெரிந்தது.அதையடுத்து, ஈட்டி தயாரிக்க பயன்படுத்திய வெல்டிங் மெஷின் உள்ளிட்ட உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, பட்டறை உரிமையாளர் முதலியார்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு என்கிற சிவா, 48; ஈட்டி தயாரிக்க ஆர்டர் கொடுத்த வீராம்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் குமார் என்கிற அனித், 41; பிரகாஷ், 39; முத்துவேல், 40; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் கூறுகையில்: சுருக்கு வலை தொடர்பாக வீராம்பட்டிணம் -நல்லவாடு மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வீராம்பட்டிணத்தை சேர்ந்த 3 மீனவர்கள், ஈட்டி போன்ற ஆயுதங்களை தயாரித்து வருவதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. ஈட்டி தயாரித்து கொடுத்த பட்டறை உரிமையாளர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X