பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா தடை; ஹிந்து முன்னணி கண்டனம்

Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு தடை விதித்திருப்பதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி கூறியிருப்பது:தமிழகத்தில் அதிகபட்ச கொரோனா தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹிந்துக்களின் பிரதான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. சுதந்திர போராட்ட

ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு தடை விதித்திருப்பதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி கூறியிருப்பது:தமிழகத்தில் அதிகபட்ச கொரோனா தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹிந்துக்களின் பிரதான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் விநாயகர் சதுர்த்தி மூலம் சுதந்திர வேட்கையை லோகமான்ய பாலகங்காதர திலகர் ஏற்படுத்தினார்.

அந்த விழாவை ஆங்கிலேய அரசு கூட தடை செய்யவில்லை. ஆனால் தமிழக அரசு தடை விதித்துள்ளது கண்டனத்திற்குரியது. பல தளர்வுகள் இல்லாத ஊரடங்கு காலத்தில் கூட பிற மதத்தினர் விழாக்கள் நடத்த அனுமதித்த தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் அனுமதி அளிக்க வேண்டும்.

இதன்மூலம் விநாயகர்சிலை செய்வோர், பூஜை பொருட்கள் விற்போர், மேளதாள கலைஞர்கள்வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இந்திய அரசியல் சட்டம் மத சுதந்திர வழிபாட்டு உரிமை வழங்கியுள்ள நிலையில், வீடுகளில் அனுமதித்துள்ளோம், என கூறியிருப்பது நகைப்பிற்குரியது.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202105:30:07 IST Report Abuse
லிங்கம், சென்னை ஒன்றுபடுங்கள் இந்து சகோதர சகோதரிகளே....தயவுசெய்து ஒன்றுபடுங்கள்.... இந்து மதத்தை முற்லும் தடை செய்யும்முன் ஒன்றுபடுங்கள்...ஒவ்வொரு வீடாகச் சென்று திமுக பாசிச கொள்கைகளை எடுத்துச் சொல்லி இந்துக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுங்கள்...இந்து மதம் உயிர் பிழைக்க வேண்டுமானால் பிஜேபியை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும்....அதுவரை உண்ண வேண்டாம் உறங்க வேண்டாம்....🙏🙏🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X