விநாயகர் சதுர்த்தி விழா தடை; ஹிந்து முன்னணி கண்டனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா தடை; ஹிந்து முன்னணி கண்டனம்

Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு தடை விதித்திருப்பதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி கூறியிருப்பது:தமிழகத்தில் அதிகபட்ச கொரோனா தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹிந்துக்களின் பிரதான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. சுதந்திர போராட்ட

ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு தடை விதித்திருப்பதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி கூறியிருப்பது:தமிழகத்தில் அதிகபட்ச கொரோனா தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹிந்துக்களின் பிரதான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் விநாயகர் சதுர்த்தி மூலம் சுதந்திர வேட்கையை லோகமான்ய பாலகங்காதர திலகர் ஏற்படுத்தினார்.

அந்த விழாவை ஆங்கிலேய அரசு கூட தடை செய்யவில்லை. ஆனால் தமிழக அரசு தடை விதித்துள்ளது கண்டனத்திற்குரியது. பல தளர்வுகள் இல்லாத ஊரடங்கு காலத்தில் கூட பிற மதத்தினர் விழாக்கள் நடத்த அனுமதித்த தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் அனுமதி அளிக்க வேண்டும்.

இதன்மூலம் விநாயகர்சிலை செய்வோர், பூஜை பொருட்கள் விற்போர், மேளதாள கலைஞர்கள்வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இந்திய அரசியல் சட்டம் மத சுதந்திர வழிபாட்டு உரிமை வழங்கியுள்ள நிலையில், வீடுகளில் அனுமதித்துள்ளோம், என கூறியிருப்பது நகைப்பிற்குரியது.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X