பொது செய்தி

இந்தியா

5 மாதங்களுக்குப் பிறகு பள்ளி கல்லூரிகள் துவக்கம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் 5 மாதங்களுக்குப் பிறகு பள்ளி, கல்லுாரிகள் நேற்று துவங்கியது. சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்தும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.புதுச்சேரியில் கொரோனா தொற்று 2வது அலை, கடந்த பிப்., மாதம் துவங்கியது.இதனால், மார்ச் மாதம், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலும், ஏப்ரல் மாதம் அனைத்து வகுப்புகளுக்கும்

புதுச்சேரி-புதுச்சேரியில் 5 மாதங்களுக்குப் பிறகு பள்ளி, கல்லுாரிகள் நேற்று துவங்கியது. சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்தும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.புதுச்சேரியில் கொரோனா தொற்று 2வது அலை, கடந்த பிப்., மாதம் துவங்கியது.இதனால், மார்ச் மாதம், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலும், ஏப்ரல் மாதம் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.தற்போது கொரோனா தொற்று பரவல் குறைய துவங்கியதால், தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும் அறிவிக்கப்பட்டது.முதல் கட்டமாக, பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் மட்டும், சுழற்சி முறையில், அரை நாள் மட்டும் இயங்கும் என அரசு அறிவித்தது.அதன்படி, ஐந்து மாதங்களுக்குப் பிறகு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி வகுப்புகளும், கல்லுாரி வகுப்புகளும் நேற்று துவங்கியது.பள்ளிக்கு வந்த மாணவர்களின் கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்து, உடல் வெப்பநிலை பரிசோதித்து, அனுமதிக்கப்பட்டனர்.மாணவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். சில பள்ளிகளில் பூக்கள் கொடுத்து மாணவர்கள் வரவேற்கப் பட்டனர்.சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் அமர வைக்கப்பட்டு, வகுப்புகள் துவங்கியது.மதியம் 1:00 மணியுடன் வகுப்பு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பினர். இதேபோல் கல்லுாரிகளிலும் வகுப்புகள் மதியம் வரை நடந்தது.காரைக்கால் பிராந்தியத்தில் பள்ளி, கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டன. கோட்டுச்சேரியில் உள்ள வ.உ.சி. அரசு பள்ளியில், மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா ஆய்வு செய்தார். மாணவர்கள் வருகை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு மாணவர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.முதன்மைக் கல்வி அதிகாரி அல்லி, பள்ளி துணை முதல்வர் கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X