பள்ளிகளில் கலை நிகழ்ச்சி, ஊர்வலம் நடத்தக்கூடாது: கலெக்டர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் கலை நிகழ்ச்சி, ஊர்வலம் நடத்தக்கூடாது: கலெக்டர் உத்தரவு

Added : செப் 02, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுஉள்ளது, நோய் தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கலை நிகழ்ச்சிகள், ஊர்வலம் போன்ற நடவடிக்களை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில் நேற்று ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பேராவூர் அரசு உயர்நிலை பள்ளியில்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுஉள்ளது, நோய் தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கலை நிகழ்ச்சிகள், ஊர்வலம் போன்ற நடவடிக்களை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில் நேற்று ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பேராவூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு செய்தார். பள்ளிகள், கல்லுாரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

கொரோனா பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி வளாகங்களில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள், ஊர்வலம் போன்றவை நடத்தக்கூடாது. போதிய கிருமிநாசினி, சோப்பு, தண்ணீர் ஆகிய அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர்சுபாஷினி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X