இரவு 8 மணிக்கு கடைகளை மூட பேரூராட்சி உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரவு 8 மணிக்கு கடைகளை மூட பேரூராட்சி உத்தரவு

Added : செப் 02, 2021
Share
அன்னுார் : அன்னுார் பேரூராட்சியில், அனைத்து கடைகளையும் இரவு 8:00 மணிக்கு மூட பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:அன்னுார் பேரூராட்சி பகுதியில், பேக்கரி மற்றும் ஓட்டல்களில் காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர். 6:00 மணிக்கு மேல், இரவு 10:00 மணி வரை

அன்னுார் : அன்னுார் பேரூராட்சியில், அனைத்து கடைகளையும் இரவு 8:00 மணிக்கு மூட பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:அன்னுார் பேரூராட்சி பகுதியில், பேக்கரி மற்றும் ஓட்டல்களில் காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர். 6:00 மணிக்கு மேல், இரவு 10:00 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும்

.மளிகை, காய்கறி, பால் மற்றும் மருந்தகங்கள் தவிர, மற்ற அனைத்துக் கடைகளும் காலை 8:00 முதல், இரவு 8:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.சனிதோறும் நடந்து வந்த வார சந்தை ரத்து செய்யப்படுகிறது. கடை உரிமையாளர்கள் இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறினால், அபராதம் விதிக்கப்படும்.

மேலும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி இன்றி கடைகளில் நின்றால், வாடிக்கையாளர்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ஆட்டோவில் ஒலிபெருக்கி வாயிலாக, அன்னுார் பேரூராட்சியில் வீதிவீதியாக நேற்று காலை முதல், அறிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X