பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநிறுவனத்திற்கு ஊக்கத்தொகை

Added : செப் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் சம உரிமை வழங்கும் சட்டம் 2015 35ன்படி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் குறைந்தபட்சம் 5 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறனாளி பணியாளர்களை கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை

ராமநாதபுரம் : மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் சம உரிமை வழங்கும் சட்டம் 2015 35ன்படி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் குறைந்தபட்சம் 5 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறனாளி பணியாளர்களை கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளி பணயாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால சேமிப்பு நல நிதி மற்றும் காப்பீட்டு தொகை இ.எஸ்.ஐ., ஆகியவற்றிற்கு நிறுவனங்கள்செலுத்த வேண்டிய தொகையினை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் வழங்கும் துறை செலுத்தும்.

மேலும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையில் நிறுவனங்கள் செலுத்தும் தொகையில் 3ல் ஒருபங்கு, சிறப்பு பயிற்சி வழங்கினால் அதற்குரிய உதவித்தொகையும் மேற்படி துறையால் வழங்கப்படும். மாவட்டத்தில் தகுதியுள்ள தனியார் நிறுவனங்கள் மேலும் விபரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X