கிரைம் செய்திகள்...

Added : செப் 02, 2021
Share
Advertisement
கிணற்றில் விழுந்த பெண் பலிதிண்டிவனம்: செஞ்சி ரோடு, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி அலமேலு, 50; இவர், நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து சென்றவர் வெகுநேரமாக வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது, அதே பகுதியில் உள்ள கிணற்றில், அலமேலு தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து

கிணற்றில் விழுந்த பெண் பலிதிண்டிவனம்: செஞ்சி ரோடு, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி அலமேலு, 50; இவர், நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து சென்றவர் வெகுநேரமாக வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது, அதே பகுதியில் உள்ள கிணற்றில், அலமேலு தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மின்சாரம் தாக்கி விவசாயி பலிவிழுப்புரம்: பாதிரியைச் சேர்ந்தவர் சேகர், 46; விவசாயி. இவர், நேற்று காலை தனது நிலத்தில் மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது, மின்சாரம் தாக்கி சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.வலிப்பு ஏற்பட்டு சிறுமி பலிகள்ளக்குறிச்சி: ஏமப்பேரைச் சேர்ந்தவர் ராஜா மகள் வைசாலி, 4; இவருக்கு கடந்த 31ம் தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே வைசாலி இறந்து விட்டதாக தெரிவித்தார். ராஜா அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.எலிபேஸ்ட் சாப்பிட்டு சிறுமி சாவுகள்ளக்குறிச்சி: நாகலுாரைச் சேரந்தவர் கருப்பையா மகள் வைத்தீஸ்வரி, 16; இவர் கடந்த 24ம் தேதி சமத்துவபுரத்தில் உள்ள தனது சித்தி கங்காதேவி வீட்டில் தங்கியுள்ளனர். அங்கே அவரது அக்காவிற்காக வைக்கப்பட்டிருந்த புது துணியை எடுத்து அணிந்துள்ளார். இதனை கங்காதேவி கேட்டதால், மனமுடைந்த வைத்தீஸ்வரி எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு வைத்தீஸ்வரி நேற்று காலை இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.மணல் கடத்திய இருவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார், இளந்துறை கிராமத்தில் உள்ள வாய்க்கால் வழியாக ரோந்து சென்றனர். அப்போது, 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த பெரியசெவலை ரவிக்குமார், 29; மண்டகமேடு பத்ராசலம், 47; ஆகிய இருவரையும் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.மது பாட்டில் விற்றவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: துலுக்கப்பாளையம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, மது பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த சிவக்குமார், 45; என்பவரை கைது செய்து, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.கூலித் தொழிலாளி தற்கொலைதிருக்கோவிலுார்: வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் மணிகண்டன், 25; கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி. இவர், தன்னுடன் கரும்பு வெட்ட வரும் 22 வயது பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன், அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து திட்டினர். இதில், மனமுடைந்த மணிகண்டன், நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் அமுதா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சாராயம் விற்ற பெண் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று பேரங்கியூர் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த சுந்தரவள்ளி, 50; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X