பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
விழுப்புரம்-ஜெ., பல்கலையை முடக்குவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஜெ., பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலையோடு இணைப்பதால் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள். விழுப்புரத்தில் வர இருந்த டைடல் பார்க், புதுச்சேரி மாநில எல்லை பகுதிக்கு மாற்றியதால் ஏற்படும்

விழுப்புரம்-ஜெ., பல்கலையை முடக்குவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஜெ., பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலையோடு இணைப்பதால் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள். விழுப்புரத்தில் வர இருந்த டைடல் பார்க், புதுச்சேரி மாநில எல்லை பகுதிக்கு மாற்றியதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கியும் விழுப்புரம் நகர அ.தி.மு.க., சார்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, ஜெ., பேரவை மாவட்ட தலைவர் ராமதாஸ், எம்.ஜி.ஆர்., இளைஞரணி நகர செயலாளர் குமரன், துணைச் செயலாளர் செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர். ஜெ., பேரவை மாவட்ட துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, முன்னாள் கவுன்சிலர் சண்முகம், ஜெ., பேரவை நகர தலைவர் சேகர், வார்டு இளைஞரணி செயலாளர் கவுதமன், செயலாளர்கள் ராஜ்குமார், அன்பு, கார்த்திகேயன், நிர்வாகிகள் பாஸ்கர், அய்யப்பன், தவுலத்கான், சபரி, சின்னா, பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X