பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., பல்கலை மூடுவதை கண்டித்து மாணவரணி துண்டு பிரசுரம் வழங்கல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
விழுப்புரம்-தி.மு.க., அரசால் விழுப்புரம் ஜெ., பல்கலை, அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவிகளிடம், அ.தி.மு.க., மாணவரணி சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாணவரணி செயலாளர் வண்டிமேடு சக்திவேல் தலைமை தாங்கினார். நகர பாசறை செயலாளர் கிருஷ்ணன்,

விழுப்புரம்-தி.மு.க., அரசால் விழுப்புரம் ஜெ., பல்கலை, அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவிகளிடம், அ.தி.மு.க., மாணவரணி சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாணவரணி செயலாளர் வண்டிமேடு சக்திவேல் தலைமை தாங்கினார். நகர பாசறை செயலாளர் கிருஷ்ணன், இலக்கிய அணி செயலாளர் கலை, ஆவின் மாநில செயலாளர் செல்வம், டாக்டர் முத்தையன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், தி.மு.க., அரசால் விழுப்புரம் ஜெ., பல்கலையை அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பது மற்றும் டைடல் பார்க் திருச்சிற்றம்பலத்திற்கு மாற்றுவதால் ஏற்படும் பாதிப்பை விளக்கி கல்லுாரி மாணவிகளிடம், துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.நிர்வாகிகள் குமரன், விஜயகுமார், கதிரவன், திருநாவுக்கரசு, மோகன், ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X