பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

Added : செப் 02, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மருதுாரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வருவதையொட்டி, அரசு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி, பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி, அங்கன்வாடி மையமும் நேற்று முதல் துவங்கியது.விழுப்புரம் மருதுார், பாரதியார் வீதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி

விழுப்புரம்-விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மருதுாரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வருவதையொட்டி, அரசு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி, பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி, அங்கன்வாடி மையமும் நேற்று முதல் துவங்கியது.விழுப்புரம் மருதுார், பாரதியார் வீதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் நேற்று கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு செய்தார்.மையத்தில் இருந்த குழந்தைகளோடு கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு ஆய்வு செய்தார். பின், மதிய உணவை குழந்தைகளுக்கு பரிமாறினார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் லலிதா உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X