தமிழ்நாடு

77 சதவீதம்: மாவட்டத்தில் மாணவர்கள் வருகைப் பதிவு...இனிப்பு வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
விழுப்புரம்-கொரோனா தொற்று பரவல் குறைந்ததையொட்டி நேற்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதையொட்டி, மாணவ, மாணவிகள் ஆவர்முடன் வருகை தந்தனர். ஒரு சில பள்ளிகளில் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததால் ஊரடங்குகளில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி கொரோனாவால் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லுாரிகளை திறக்க அரசு
 77 சதவீதம்: மாவட்டத்தில் மாணவர்கள் வருகைப் பதிவு...இனிப்பு வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்

விழுப்புரம்-கொரோனா தொற்று பரவல் குறைந்ததையொட்டி நேற்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதையொட்டி, மாணவ, மாணவிகள் ஆவர்முடன் வருகை தந்தனர்.

ஒரு சில பள்ளிகளில் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததால் ஊரடங்குகளில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி கொரோனாவால் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லுாரிகளை திறக்க அரசு உத்தரவிட்டது.அதன் படி, 9 முதல் 12ம் வகுப்பு வரை நேற்று முதல் வகுப்புகள் துவங்கியது. மேலும், கலைக் கல்லுாரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நேற்று முதல் திறக்கப்பட்டன.

முதல் நாளான நேற்று பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவ, மாணவிகள் காலை 8.50 மணிக்கே ஆர்வத்தோடு வந்தனர்.மாணவர்களை, பெற்றோர்கள் பலர் தங்கள் வாகனங்களில் அழைத்து வந்ததுடன், பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்த்துச் சென்றனர்.அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும், சானிடைசர், முகக் கவசம் இல்லாதோருக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது.அதுமட்டுமின்றி ஒரு சில பள்ளிகளில், மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பள்ளிகளில் ஒரு இருக்கைக்கு தலா 2 பேர் என 20 பேர் வீதம் சமூக இடைவெளியோடு, மாணவர்கள் அமர்த்தப்பட்டனர்.அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் கொரோனா தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு சுகாதாரத் துறை மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.இங்கு, மாணவர்களுக்கு உடல்நிலை பரிசோதனை செய்து, அவர்கள் விரும்பும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டது.மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் 385 உள்ளன. 9 முதல் பிளஸ் 2 வரை 87 ஆயிரத்து 907 மாணவர்கள் பயில்கின்றனர். பல பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை உள்ளதால் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.இந்த வகுப்புகளில் நேற்று வராதோருக்கு, சுழற்சி முறையில் இன்று 2ம் தேதி வகுப்புகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் நாளில் மாவட்டம் முழுதும் 68 ஆயிரத்து 53 மாணவ, மாணவிகள் வந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர் வருகை பதிவு 77 சதவீதமாக இருந்தது.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புகளை உறுதி செய்வதற்காக, மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பு அலுவலர் ராமேஸ்வர முருகன், கலெக்டர் மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.கல்லுாரிகளில் நேற்று முதல் நாளில் 75 சதவீத மாணவர்கள் ஆர்வத்தோடு வந்தனர். பல மாதங்களாக மாணவர்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட வகுப்பறைகள் மாணவர்கள் நிறைந்து பளீச்சென இருந்தது.

பெற்றோர்களின் அச்சம் விலகியதுஆன்லைன் மூலம் கற்பதை விட பள்ளிகளில் நேரில் ஆசிரியர்கள் கற்றுத் தரும் பாடங்களை கற்பது பிள்ளைகளுக்கு சுலபமாக இருக்கும். தற்போது மாணவர்கள் ஆசிரியர்களுக்கான அந்த இடைவெளி நீங்கியது. மேலும், கொரோனா தொற்று சூழலில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருந்தது. ஆனால், பள்ளிகளில் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்ததும் அந்த அச்சம் முற்றிலுமாக விலகியது என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X