தமிழ்நாடு

கேள்விக்குறி: கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி மாணவர்களின் கல்வி...மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

Added : செப் 02, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்ட கட்டடத்தை மருத்துவக் கல்லுாரிக்கு தாரை வார்க்கப்பட்டது. இதனால், சொந்த இடமின்றி அடிப்படை வசதி இல்லாத பள்ளிக் கட்டடத்தில் கல்லுாரி இயங்கி வருகிறது. கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவது குறித்து, மாவட்ட நிர்வாகம் சிறிதும் கவனம் செலுத்தாததால் மாணவர்களின் கல்வித்தரம்
 கேள்விக்குறி: கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி மாணவர்களின் கல்வி...மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்ட கட்டடத்தை மருத்துவக் கல்லுாரிக்கு தாரை வார்க்கப்பட்டது.

இதனால், சொந்த இடமின்றி அடிப்படை வசதி இல்லாத பள்ளிக் கட்டடத்தில் கல்லுாரி இயங்கி வருகிறது. கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவது குறித்து, மாவட்ட நிர்வாகம் சிறிதும் கவனம் செலுத்தாததால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அரசு மருத்துவமனை அருகே உள்ள துவக்கப் பள்ளியில் துவங்கியது.

தொடர்ந்து கல்லுாரிக்கென நிரந்தர கட்டடம் கட்ட சிறுவங்கூர் கிராம எல்லையில் 11 ஏக்கர் பரப்பளவுடன் கூடிய இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் 15 வகுப்பறைகள், 2 ஆய்வகங்களுடன் கல்லுாரி கட்டப்பட்டு, கடந்த 2016ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல் உள்ளிட்ட 7 பாடப்பிரிவுகளில், தற்போது 1,013 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.முதல்வர் உட்பட 59 விரிவுரையாளர்கள், 8 பணியாளர்கள் என மொத்தம் 67 பேர் பணிபுரிகின்றனர். நடப்பு கல்வியாண்டில் 430 மாணவ, மாணவிகளை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அரசு கல்லுாரி கட்டடம் தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றப்பட்டது. இரண்டாம் அலையின் போது, கல்லுாரி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட படுக்கைகள், சாய்தளம், அனைத்து அறைகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லும் பைப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பல லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டது.தொடர்ந்து, கல்லுாரி கட்டடம் அருகே மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டடம் கட்டப்படுகிறது.

இதனால், கல்லுாரி கட்டடம் தேவைப்படுவதால் அந்த கட்டடத்தை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அதற்கு பதிலாக, அரசு கல்லுாரிக்கென சடையம்பட்டு கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தையும், 11 கோடி ரூபாயையும் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.ஆனால், அந்த இடத்தில் இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை. இதனால் நிரந்தர கட்டடமின்றி, அரசு கல்லுாரி பந்தாடப்படுகிறது.சில மாதம் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சில மாதம் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இயங்கிய நிலையில், தற்போது ஏமப்பேர் கரியப்பா நகர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 3 வகுப்பறைக் கட்டடங்களில் கல்லுாரி இயங்குகிறது.இங்கு, மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய வகுப்பறை கட்டடங்கள் ஒதுக்கப்படவில்லை.

குறிப்பாக, ஆய்வகங்கள், நுாலகம், செமினார் ஹால், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை.கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவங்கூரில் கல்லுாரி இயங்கிய நிலையில், திடீரென மருத்துவகல்லுாரி நிர்வாகத்திற்கு தாரை வார்க்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறொரு இடமும், நிதியும் ஒதுக்கப்பட்டாலும், இதுவரை அங்கு கட்டுமானப் பணிகள் துவக்கப்படவில்லை.அரசு கல்லுாரிக்கென நிரந்தர கட்டடம் கட்டுவது குறித்து, மாவட்டம் நிர்வாகம் சிறிதும் அக்கறை காட்டாததால், மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நேற்று முதல் கல்லுாரி திறக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X