பொது செய்தி

தமிழ்நாடு

10 கிராம மக்கள் பிரச்னைக்கு விடிவு வருமா; 40 ஆண்டு கால போராட்டம் தொடர்கிறது

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மணல்மேடு, கே.பெத்தானேந்தல், சடங்கி, கருங்குளம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டுமென்று நீண்ட நாட்களாககோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை எப்போது நிறைவேறும் என்று எதிர்பார்க்கின்றனர்.கே. பெத்தானேந்தல், மணல்மேடு, சடங்கி, வெங்கட்டி, கருங்குளம், கணக்கன்குடி, கானுார்
 10 கிராம மக்கள் பிரச்னைக்கு விடிவு வருமா;  40 ஆண்டு கால போராட்டம் தொடர்கிறது

திருப்புவனம் : திருப்புவனம் அருகே மணல்மேடு, கே.பெத்தானேந்தல், சடங்கி, கருங்குளம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டுமென்று நீண்ட நாட்களாககோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை எப்போது நிறைவேறும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கே. பெத்தானேந்தல், மணல்மேடு, சடங்கி, வெங்கட்டி, கருங்குளம், கணக்கன்குடி, கானுார் உள்ளிட்ட பத்து கிராமங்களில் தென்னை, வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யவும், பிற தேவைகளுக்கு திருப்புவனம், மதுரை நகரை நம்பியே உள்ளனர்.

இக்கிராமங்களில் இருந்து திருப்புவனம் வர கணக்கன்குடி, ஏனாதி, தேளி வழியாக 10 கி.மீ., சுற்றித்தான் வரமுடியும், இதனை தவிர்க்க கே. பெத்தானேந்தல் - லாடனேந்தல் இடையே வைகை ஆற்றின்குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என 40 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

ஊராட்சி தலைவர் ராமேஸ்வரி: திருப்புவனத்திற்கு வைகை ஆற்றை கடந்தால் வெறும் மூன்று கி.மீ.,துாரம் தான். ஆனால் நாங்கள் 10 கி.மீ., சுற்றி தான் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் தான் பஸ்கள்இயக்கப்படுகின்றன. இதனால் அவசரத்திற்கு வைகை ஆற்றை கடந்து லாடனேந்தல் சென்று பஸ் ஏறுகிறோம், ஆற்றில் நீர் வந்தால் வேறு வழியின்றி சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

துணை தலைவர் கருங்குளம் கோபி கூறுகையில், 10 கி.மீ., சுற்றி செல்வதுடன் பள்ளி மாணவிகள் இரவு நேரங்களில் சுற்றி வர வேண்டியுள்ளதால் வேறு வழியின்றி பள்ளி முடிந்த உடன் டியூசன், உயர்கல்வி நுழைவு தேர்வு உள்ளிட்ட எதற்கும் செல்ல முடியவில்லை. மேம்பாலம் கட்டப்பட்டால் எங்கள் ஊராட்சி மட்டுமல்லாது 16 கிராம மக்களும் பயன் பெறுவார்கள்.

சமூக ஆர்வலர் மணல்மேடு ராஜா: கே.பெத்தானேந்தல் - லாடனேந்தல் இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம், தமிழக அரசு 2020- -21 ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் ஆறுகளின் குறுக்கே 50 மேம்பாலங்கள் 250 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட உள்ளதாகவும் அதில் பெத்தானேந்தல் - லாடனேந்தல் இடையே வைகை ஆற்றின் குறுக்கே 270 மீட்டர் நீளத்தில் மேம்பாலமும் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவித்தது. மண் பரிசோதனையும் நடந்தது. ஆனால் திட்டம் துவக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X