பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-'பெற்றோரை தடுப்பூசி போட வலியுறுத்துங்கள்' என, மாணவர்களுக்கு டி.இ.ஓ., அறிவுறுத்தினார்.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளுடன் நேற்று முதல் வகுப்புகள் துவங்கியது. இதனை விருத்தாசலம் டி.இ.ஓ., சுப்ரமணியன் ஆய்வு செய்தார். மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தவும், வருகைப் பதிவேட்டை உடனடியாக ஆன்லைனில்

விருத்தாசலம்-'பெற்றோரை தடுப்பூசி போட வலியுறுத்துங்கள்' என, மாணவர்களுக்கு டி.இ.ஓ., அறிவுறுத்தினார்.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளுடன் நேற்று முதல் வகுப்புகள் துவங்கியது. இதனை விருத்தாசலம் டி.இ.ஓ., சுப்ரமணியன் ஆய்வு செய்தார். மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தவும், வருகைப் பதிவேட்டை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர், டி.இ.ஓ., பேசுகையில், 'மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வகுப்பறையில் இடைவெளி விட்டு அமர வேண்டும். உணவு பொருட்கள், குடிநீர் பாட்டிலை பரிமாறுதல் கூடாது. கொரோனா எளிதில் தாக்கும் என்பதால், பெற்றோர், உறவினர்களை தடுப்பூசி போட வலியுறுத்துங்கள்.ஒன்றரை ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் நடைபெறாததால், கல்வி கற்கும் திறன் குறைந்துவிட்டது. விடுமுறை எடுக்காமல் மாணவர்கள் வர வேண்டும். குறைந்த நாட்களே இருப்பதால், ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்றார். பள்ளி துணை ஆய்வாளர் தெய்வசிகாமணி, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வினோத்குமார், உடற்கல்வி ஆசிரியர் பிரகாசம் உடனிருந்தனர். தொடர்ந்து, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டி.இ.ஓ., ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X