சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தில் ஏறி தவித்த சிறுவனை தீயணைப்பு படையினர் மீட்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே நாவல் மரத்தில் பழம் பறிக்க ஏறி, கீழே இறங்க முடியாமல் தவித்த சிறுவனை, தீயணைப்பு படையினர் மீட்டனர்.புதுச்சேரி, மூலக்குளம் 7 வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் கமலேஸ்வரன், 14. இவர் நேற்று பரங்கிப்பேட்டை அகரம் புதுப்பேட்டையில் உள்ள தனது பாட்டி லட்சுமி வீட்டிற்கு, வந்துள்ளார்.மதியம் 1;30 மணியளவில், அகரம் ரயிலடியில் உள்ள

பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே நாவல் மரத்தில் பழம் பறிக்க ஏறி, கீழே இறங்க முடியாமல் தவித்த சிறுவனை, தீயணைப்பு படையினர் மீட்டனர்.புதுச்சேரி, மூலக்குளம் 7 வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் கமலேஸ்வரன், 14. இவர் நேற்று பரங்கிப்பேட்டை அகரம் புதுப்பேட்டையில் உள்ள தனது பாட்டி லட்சுமி வீட்டிற்கு, வந்துள்ளார்.மதியம் 1;30 மணியளவில், அகரம் ரயிலடியில் உள்ள நாவல்மரத்தில் ஏறி, பழம் பறித்துவிட்டு கீழே இறங்க முடியாமல், அச்சத்தில் அழுதுள்ளார். அதனை பார்த்த பொது மக்கள் பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மரத்தில் இருந்தசிறுவனை, கயிறுக்கட்டி பாதுகாப்பாக இறக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X