பொது செய்தி

தமிழ்நாடு

கீழடி பஸ் நிறுத்தம்; பொது மக்கள் தவிப்பு 

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் அருகே கீழடிக்கு அரசு டவுன் பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.மதுரைக்கு அருகாமையில் கீழடி அமைந்துள்ளது. கீழடியைச் சுற்றிலும் கீழடி, முனியாண்டிபுரம், ஜோதிபுரம், அகரம் ,காலனி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கீழடிக்கு தினசரி ஆறு முறை இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே கீழடிக்கு அரசு டவுன் பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

மதுரைக்கு அருகாமையில் கீழடி அமைந்துள்ளது. கீழடியைச் சுற்றிலும் கீழடி, முனியாண்டிபுரம், ஜோதிபுரம், அகரம் ,காலனி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கீழடிக்கு தினசரி ஆறு முறை இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கீழடி பழனிச்சாமி கூறுகையில்; உலக புகழ் பெற்ற கீழடிக்கு இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ்சை நிறுத்தி விட்டனர். இந்த டவுன் பஸ்சை நம்பி பள்ளி,கல்லுாரி மற்றும் கூலி தொழிலுக்கு செல்பவர்கள் உள்ளனர். ஆறு முறை இயக்கப்பட்டு வந்த பஸ் இரு முறையாக மாற்றப்பட்டது இதுவும் அதிகாலை ஐந்து மணிக்கும், இரவு 10:30 மணிக்கும் வந்து செல்வதால் யாருக்கும் பயனில்லை. எனவே மீண்டும் பழைய முறைப்படி பஸ்சை இயக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X