அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் மனு

Added : செப் 02, 2021
Share
விருத்தாசலம்-தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில்,விருத்தாசலம் உதவி வேளாண் இயக்குனர் அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில செயலர் சக்திவேல் தலைமையில், அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் மனு அளித்தனர். அதில், சம்பா பருவ சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகளுக்கு, உரம் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

விருத்தாசலம்-தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில்,விருத்தாசலம் உதவி வேளாண் இயக்குனர் அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில செயலர் சக்திவேல் தலைமையில், அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் மனு அளித்தனர். அதில், சம்பா பருவ சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகளுக்கு, உரம் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை வேண்டும். கலெக்டரால் ஜூம் மீட்டிங்கில் நடத்தப்படும் விவசாயிகளின் குறைதீர் கூட்டத்திற்கு, அனைத்து விவசாயிகளுக்கும் அழைப்பு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு விவசாய குழுக்களுக்கும் ரூ.5 லட்சம் வழங்கப்பட்ட கடன் உதவியில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் அடங்கி இருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X