பொது செய்தி

தமிழ்நாடு

எல்லையில் எச்சரிக்கை பலகை தாம்பரம் போலீசார் ஏற்பாடு

Added : செப் 02, 2021
Share
Advertisement
தாம்பரம்-தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குள், குற்றங்களை தடுக்க, பொது மக்கள் புகார் அளிக்க வசதியாக, போலீசார் சார்பில், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.தாம்பரம் காவல் நிலையம், சண்முகம் சாலை, ரங்கநாதபுரம் சாலை, கிருஷ்ணா நகர், சி.டி.ஓ., காலனி என, நான்கு செக்டர்களாக பிரிக்கப்பட்டு, அங்கு, போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில், ஈடுபட்டு வருகின்றனர்.இதில்,

தாம்பரம்-தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குள், குற்றங்களை தடுக்க, பொது மக்கள் புகார் அளிக்க வசதியாக, போலீசார் சார்பில், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.தாம்பரம் காவல் நிலையம், சண்முகம் சாலை, ரங்கநாதபுரம் சாலை, கிருஷ்ணா நகர், சி.டி.ஓ., காலனி என, நான்கு செக்டர்களாக பிரிக்கப்பட்டு, அங்கு, போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில், ஈடுபட்டு வருகின்றனர்.இதில், ரங்கநாதபுரம் பகுதியில், கஞ்சா விற்பனையும், கிருஷ்ணா நகர், சி.டி.ஓ., காலனி பகுதிகளில், செயின் பறிப்பு, வீடுகளின் பூட்டை திருட்டு சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன.இவற்றில் ஈடுபடுபவர்கள் குறித்து, பொது மக்கள் போலீசாருக்கு, தகவல் தெரிவிக்கவும், குற்றங்களை தடுக்கவும் போலீசார், எச்சரிக்கை பலகை வைக்க, முடிவு செய்தனர்.இதன்படி, ஒவ்வொரு செக்டாருக்கும், 50 பலகைகளும், காவல் நிலைய எல்லைகளில், 15 பலகைகளும் வைக்கப்பட்டு வருகின்றன.அதில், இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வோர், காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், சந்தேகப்படும்படியாக சுற்றுபவர்கள், பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் பற்றிய, விபரங்களை தெரிவிக்க வசதியாக, இன்ஸ்பெக்டர் துவங்கி முதல்நிலை காவலர் வரையிலான போலீசாரின், மொபைல் போன் எண்கள் இடம் பெற்றுள்ளன.குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய விபரங்களை, பொது மக்கள் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள், ரகசியமாக வைக்கப்படும் என, தாம்பரம், சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர், சார்லஸ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X