சமூக விரோதிகள் கூடாரமான அரசு குடியிருப்பு; அச்சத்தில் சிங்கம்புணரி மக்கள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிங்கம்புணரியில் அரசு ஊழியர் குடியிருப்பு சிதிலமடைந்து முட்புதர் மண்டிக்கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது.ராமநாதபுரம் வீட்டு வசதி வாரியம் சார்பில் 50 ஆண்டிற்கு முன் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன் அரசு ஊழியர் குடியிருப்பு கட்டப்பட்டது. இரண்டாம் நிலை அதிகாரிகள் குடியிருக்க 'பி' டைப் வீடுகள், கண்காணிப்பாளர்,

சிவகங்கை : சிங்கம்புணரியில் அரசு ஊழியர் குடியிருப்பு சிதிலமடைந்து முட்புதர் மண்டிக்கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது.

ராமநாதபுரம் வீட்டு வசதி வாரியம் சார்பில் 50 ஆண்டிற்கு முன் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன் அரசு ஊழியர் குடியிருப்பு கட்டப்பட்டது. இரண்டாம் நிலை அதிகாரிகள் குடியிருக்க 'பி' டைப் வீடுகள், கண்காணிப்பாளர், அசிஸ்டன்ட் உள்ளிட்டோர் குடியிருக்க 'சி' டைப் வீடுகள் என 40 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. அதில் குடியிருக்க சிங்கம்புணரி தாலுகா அளவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் முன்வரவில்லை. அருகிலேயே மதுரை இருப்பதால் அங்கிருந்து தான் வேலைக்கு வந்து செல்கின்றனர்.


சமூக விரோதிகளின் கூடாரம்


ஊழியர்கள் இங்கு தங்காததால் காலப்போக்கில் வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்துள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் இந்த வளாகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. குடியிருப்புகளை சுற்றி முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.சிதிலமடைந்த வீடுகளை குடிமகன்கள் மதுபான கூடம் போல் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பயன்படாமல் உள்ள வீடுகளை அப்புறப்படுத்தி ஊழியர்களுக்கு புதிதாக வீடுகளை கட்டித்தர முன்வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X