மின்சாரம் தாக்கி விபத்து கணவன் பலி; மனைவி காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி விபத்து கணவன் பலி; மனைவி காயம்

Added : செப் 02, 2021
Share
சேலையூர்--குளிப்பதற்காக வெந்நீர் வைக்க முயன்றபோது, 'வாட்டர் ஹீட்டரில்' இருந்து, மின்சாரம் தாக்கியதில், கணவன் பலியானார். அவரை, காப்பாற்ற முயன்ற மனைவி, பலத்த காயம்அடைந்தார்.தாம்பரம் அடுத்த செம்பாக்கம், சுந்தரர் தெருவைச் சேர்ந்தவர், சதீஸ்குமார், 40; துரைப்பாக்கத்தில் உள்ள, தனியார் 'லேத்' பட்டறையில் பணியாற்றினார். இவரின் மனைவி, ரேவதி, 30.இந்த தம்பதிக்கு, 13 மற்றும் 8 வயதில்

சேலையூர்--குளிப்பதற்காக வெந்நீர் வைக்க முயன்றபோது, 'வாட்டர் ஹீட்டரில்' இருந்து, மின்சாரம் தாக்கியதில், கணவன் பலியானார். அவரை, காப்பாற்ற முயன்ற மனைவி, பலத்த காயம்அடைந்தார்.தாம்பரம் அடுத்த செம்பாக்கம், சுந்தரர் தெருவைச் சேர்ந்தவர், சதீஸ்குமார், 40; துரைப்பாக்கத்தில் உள்ள, தனியார் 'லேத்' பட்டறையில் பணியாற்றினார். இவரின் மனைவி, ரேவதி, 30.இந்த தம்பதிக்கு, 13 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை சதீஸ்குமார், குளிப்பதற்காக, 'வாட்டர் ஹீட்டர்' வாயிலாக, சுடு தண்ணீர் போட்டுள்ளார்.தண்ணீர் சுடானதா என பார்க்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்தது. சதீஸ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ரேவதி, சதீஸ்குமாரை காப்பாற்றுவதற்காக, அவரது, கையை பிடித்தார்.இதில், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டார்.இதில், சதீஸ்குமார் உயிரிழந்தார். படுகாயமடைந்த ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* சேலையூர்: மேற்கு வங்க மாநிலம், புர்துவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஹனிப் ஷேக், 59. இவர், தாம்பரம் அடுத்த செம்பாக்கம், பஜனை கோயில், 2வது குறுக்கு தெருவில் உள்ள, தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, இரண்டாம் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். 'டியூப் லைட்' எரியாததால், தரை தளத்திற்கு இறங்கி வந்து மின் இணைப்பை சரிபார்த்தார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இது குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X