பொது செய்தி

தமிழ்நாடு

கூலி தொழிலாளிக்கு வீடு கட்டி கொடுத்த எம்.எல்.ஏ.,

Added : செப் 02, 2021
Share
Advertisement
வேளச்சேரி--மின் கசிவால், ஏற்பட்ட தீ விபத்தில், குடிசையை இழந்த மாற்றுத்திறனாளிக்கு, வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, தன் சொந்த செலவில் புது வீடு கட்டி கொடுத்தார்.வேளச்சேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் முனியன், 40; மாற்றுத்திறனாளி. கூலிதொழிலாளியான இவருக்கு, மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இவர்கள், 300 சதுர அடி

வேளச்சேரி--மின் கசிவால், ஏற்பட்ட தீ விபத்தில், குடிசையை இழந்த மாற்றுத்திறனாளிக்கு, வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, தன் சொந்த செலவில் புது வீடு கட்டி கொடுத்தார்.வேளச்சேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் முனியன், 40; மாற்றுத்திறனாளி. கூலிதொழிலாளியான இவருக்கு, மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இவர்கள், 300 சதுர அடி பரப்பளவு கொண்ட, ஓலை குடிசை வீட்டில் வசித்தனர். ஜூலை, 26ம் தேதி, மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ பிடித்தது. வீடு மற்றும் அதில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. தகவல் அறிந்த, வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, அவர் நடத்தும், ஜெ.எம்.எச்., பவுண்டேசன் சார்பில், 2 லட்சம் செலவில், சுற்றுச் சுவர் கட்டி, ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட வீடு கட்டி கொடுத்தார். நேற்று, புதிதாக கட்டிய வீட்டை, ஹசன்மவுலானா திறந்து வைத்து, முனியனிடம் ஒப்படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X