பொது செய்தி

தமிழ்நாடு

கோடம்பாக்கம் மண்டலத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கே.கே.நகர்-கோடம்பாக்கம் மண்டலம், 131வது வார்டில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், 350 கிலோ டயர், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றினர்.கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி சுகாதார துறை ஊழியர்கள், அதன் தாக்கம் குறைந்துள்ளதால், கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில் சமீபமாக பரவலாக மழை

கே.கே.நகர்-கோடம்பாக்கம் மண்டலம், 131வது வார்டில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், 350 கிலோ டயர், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றினர்.கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி சுகாதார துறை ஊழியர்கள், அதன் தாக்கம் குறைந்துள்ளதால், கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில் சமீபமாக பரவலாக மழை பெய்து வருவதால், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.இதையடுத்து, நேற்று கோடம்பாக்கம் மண்டலம், 131வது வார்டில், தண்ணீர் தேங்கும் தேவையற்ற பொருட்கள் அகற்றும் பணியில், மண்டலத்தின், 16 வார்டுகளில் உள்ள சுகாதார துறை ஊழியர்களும் ஈடுபட்டனர்.இதில், மழை நீர் தேங்கும், டயர், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் உள்ளிட்ட, 350 கிலோ தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டன. மேலும், கொசு 'லார்வா' இருந்த, 18 வீடுகளுக்கு தலா, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், கே.கே.நகர் காமராஜர் சாலையில், கொசு ஒழிப்பு குறித்து, மாநகராட்சி சுகாதார துறை ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, கபசுர குடிநீர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X