பஸ் மேற்கூரையில் ஏறி கல்லுாரி மாணவர்கள் அட்டகாசம்| Dinamalar

பஸ் மேற்கூரையில் ஏறி கல்லுாரி மாணவர்கள் அட்டகாசம்

Added : செப் 02, 2021
Share
அண்ணாசதுக்கம்--பஸ் மேற்கூரையில் ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்ட, கல்லுாரி மாணவர்கள் இருவரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, பள்ளி, கல்லுாரிகளை திறக்க அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, முதல் நாளான நேற்று, பல்வேறு இடங்களில் மாணவர்கள் பஸ்சிலும், சாலைகளிலும் ஆரவாரம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக, வழித்தடம் எண்:

அண்ணாசதுக்கம்--பஸ் மேற்கூரையில் ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்ட, கல்லுாரி மாணவர்கள் இருவரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, பள்ளி, கல்லுாரிகளை திறக்க அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, முதல் நாளான நேற்று, பல்வேறு இடங்களில் மாணவர்கள் பஸ்சிலும், சாலைகளிலும் ஆரவாரம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக, வழித்தடம் எண்: '6டி' பஸ்சின் மேற்கூரையில் மாநிலக் கல்லுாரி மாணவர்கள் இருவர் ஏறி அட்டகாசம் செய்தவாறு பயணித்தனர். தகவலறிந்து வந்த அண்ணாசதுக்கம் போலீசார், இரண்டு மாணவர்களையும் பிடித்து சென்று விசாரித்தனர்.இதில், எர்ணாவூரைச் சேர்ந்த எழிலரசு, 21, எண்ணுாரைச் சேர்ந்த தினேஷ்குமார், 21, என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதேபோல், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், திருத்தணி ரூட்டுக்கு ஜெ என்றும் பச்சையப்பாஸ் கல்லுாரிக்கு ஜெ என்றும் கோஷமிட்டவாறு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X