போலீஸ் செய்திகள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஒடிசா வாலிபர் பலிஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார் மயானம் பகுதியிலுள்ள வீட்டில் போர்வெல் போட்டுள்ளனர். பணி முடிந்ததும் இரும்பு ராடுகளை கழற்றி அடுக்கி கொண்டிருந்தனர்.இதில் பணியாற்றிய ஒடிசா நவ்ரங்பூரை சேர்ந்த சம்பரு சாண்டா 27, மீது ராடுகள் விழுந்ததில் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.---கார் மோதி சிறுமி பலிசிவகாசி: கொங்கலாபுரத்தை சேர்ந்தவர்

ஒடிசா வாலிபர் பலி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார் மயானம் பகுதியிலுள்ள வீட்டில் போர்வெல் போட்டுள்ளனர். பணி முடிந்ததும் இரும்பு ராடுகளை கழற்றி அடுக்கி கொண்டிருந்தனர்.இதில் பணியாற்றிய ஒடிசா நவ்ரங்பூரை சேர்ந்த சம்பரு சாண்டா 27, மீது ராடுகள் விழுந்ததில் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.---

கார் மோதி சிறுமி பலி

சிவகாசி: கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் வசந்தா 60 . இவரும் தனது உறவினர் பெண் சிறுமி ஸ்ரீநிதியும் 13, ரோட்டில் நடந்து சென்றபோது கார் மோதியதில் வசந்தா இறந்தார். காயமடைந்த சிறுமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார்.

கஞ்சா விற்ற இருவர் கைது

சிவகாசி: உசேன் காலனியில் கஞ்சா விற்பனை செய்த ஸ்ரீவில்லிபுத்துார் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சம்சுதீனை 26, கிழக்கு போலீசார் கைது செய்தனர். திருத்தங்கல் கண்ணகி காலனியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மதுரை பாஸ்கரனை 46, திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். இருவரிடமிருந்து 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஜெயலலிதா பல்கலையை அண்ணா பல்கலையுடன் இணைக்கும் சட்ட மசோதாவை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு நேற்றுமுன்தினம் அ.தி.மு.க., வினர் மறியல் செய்தனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்பட 40 பேர் மீது ஸ்ரீவி.,டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X