புதராக மாறிய உபரி நீர் போக்கு கால்வாய்

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருநீர்மலை-செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, திருநீர்மலை வழியாக உபரி நீர் செல்லும் போக்கு கால்வாய், புதர் மண்டி, காடு போல் காட்சியளிக்கிறது.செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது, மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படும். அந்த உபரி நீர், குன்றத்துார்- ஸ்ரீபெரும்புதுார், வண்டலுார்- மீஞ்சூர் வெளிட்ட சாலைகளை கடந்து, திருமுடிவாக்கம், வழுதலம்மேடு, திருநீர்மலை வழியாக அடையாறு

திருநீர்மலை-செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, திருநீர்மலை வழியாக உபரி நீர் செல்லும் போக்கு கால்வாய், புதர் மண்டி, காடு போல் காட்சியளிக்கிறது.செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது, மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படும். அந்த உபரி நீர், குன்றத்துார்- ஸ்ரீபெரும்புதுார், வண்டலுார்- மீஞ்சூர் வெளிட்ட சாலைகளை கடந்து, திருமுடிவாக்கம், வழுதலம்மேடு, திருநீர்மலை வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும்.இந்த கால்வாயை, ஒவ்வொரு ஆண்டும், மழைக்கு முன், துார் வாரி, சுத்தப்படுத்தி, கரையை பலப்படுத்துவர். ஆனால், சில ஆண்டுகளாக கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்தாண்டு, மழைக்கு முன், புதர்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், பொதுப்பணித்து துறையினர் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால், வெளிவட்ட சாலை சந்திப்பு முதல் அடையாறு ஆறு சந்திப்பு வரை, செடி, கொடிகள் வளர்ந்து, புதராக மாறி, காடு போல் மாறிவிட்டது.மற்றொரு புறம், அருகேயுள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை, விதிமுறையை மீறி, இந்த கால்வாயில் கலக்கின்றனர். இதையும், அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை.பருவமழை காலம் நெருங்கிவிட்டதால், இனியும் தாமதப்படுத்தாமல் போக்கு கால்வாயில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றி, சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X