தமிழ்நாடு

காலம் கடந்து கிடைக்கும் விவசாய பொருட்கள்; விவசாயிகள் அதிருப்தி

Added : செப் 02, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படும் தக்கை பூண்டு பசுந்தாள் உரம் போன்ற இடுபொருட்கள் தாமதமாக கிடைப்பதால், செயற்கை உரமிட்டே விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. காலம் கடந்து தருவதால் பலனின்றி போவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். விவசாயத்தில் உழுதல், நடவு, வளர்பருவம், அறுவடை என்ற படிநிலைகளில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆடிப்பட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படும் தக்கை பூண்டு பசுந்தாள் உரம் போன்ற இடுபொருட்கள் தாமதமாக கிடைப்பதால், செயற்கை உரமிட்டே விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. காலம் கடந்து தருவதால் பலனின்றி போவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

விவசாயத்தில் உழுதல், நடவு, வளர்பருவம், அறுவடை என்ற படிநிலைகளில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆடிப்பட்டம் துவங்கியது முதலே வேகமெடுத்த உழுதல், நடவு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழையும் அக்டோபரில் துவங்க உள்ளது. இந்நிலையில் உழுதலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்கை பூண்டு பசுந்தாள் உரம் வேளாண் துறை மூலம் 12 ஏக்கருக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுவது வழக்கம்.

இந்தாண்டு தற்போது வழங்கப்படாத நிலை உள்ளது. ராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார், வெம்பக்கோட்டை பகுதிகளில் நடவு பணிகள் நடந்து வருகின்றன. தக்கை பூண்டு உரத்தை பயன்படுத்துவதன் மூலம் மண்வளம் பெருகி மண் புழுக்கள் அதிகரிக்கிறது. நல்ல தழைச்சத்துள்ள விளைபொருட்கள் கிடைக்கின்றன. இதே போல் படைப்புழுவை கட்டுப்படுத்துவதில் வேப்பம்புண்ணாக்கை அடி உரமாக இட வேண்டும் என வேளாண்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

வேளாண் அலுவலர்களின் கள ஆய்வு குறைந்து வருவதால் மக்காச்சோள விவசாயிகள் அனைவரும் வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்தினரா என்பது கேள்விக்குறி தான். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு விவசாயிகள் அனைவருக்கும் பசுந்தாள் உரமான தக்கை பூண்டு போன்ற இடுபொருட்கள் கிடைப்பதற்கும், மக்காசோள விவசாயிகள் வேப்பம் புண்ணாக்கு நிலத்தில் இடுவதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

.பாலைவனத்தில் பெய்யும் மழை போன்றது பசுந்தாள் உரமான தக்கை பூண்டு நெல் மட்டுமல்லாது அனைத்து மானாவாரி, தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கும் மிகவும் உதவியாக இருக்கும். இதை அரசு காலம் கடத்தி வழங்குவது பாலைவனத்தில் பெய்யும் மழை போன்றது. பலனளிக்காது. விவசாயத்தை பொறுத்த வரையில் அந்தந்த காலகட்டத்தில் செய்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். இவ்வகை இயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்துவதன் மூலம் யூரியா, பொட்டாசியம் போன்ற செயற்கை உரங்களை குறைந்த அளவு பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். கர்ணன், விவசாயி, விருதுநகர்...............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X