பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் தேங்கும் மழை நீர் குளத்திற்குள் விடப்படுமா?

Added : செப் 02, 2021
Share
Advertisement
புழல்-சாலையில் தேங்கும் மழை நீரை குளத்திற்குள் தேக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை, மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் பகுதிகளில் இருந்து பாயும் மழை நீர், திருவள்ளுவர் தெருவில் வந்து சேருகிறது. அங்குள்ள அம்மா உணவகம் முதல் ரேஷன் கடை வரை குளமாக தேங்குவதால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும்

புழல்-சாலையில் தேங்கும் மழை நீரை குளத்திற்குள் தேக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை, மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் பகுதிகளில் இருந்து பாயும் மழை நீர், திருவள்ளுவர் தெருவில் வந்து சேருகிறது. அங்குள்ள அம்மா உணவகம் முதல் ரேஷன் கடை வரை குளமாக தேங்குவதால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர்.மேலும், சாலையும் சேதமடைந்து வருகிறது. அந்த சாலைக்கு அருகே மாநகராட்சி குளம் உள்ளது. குளத்திற்கும் சாலைக்கும் இடையே உள்ள சிறிய மழை நீர் வடிகாலும், மண் மற்றும் கழிவுகளால் அடைந்துள்ளது.இந்நிலையில், சாலையில் தேங்கிய மழை நீரை குளத்திற்குள் செல்லும் வகையில் கால்வாய் அடைப்புகளை அகற்றி, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மேலும், காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் மழை நீர் வடிகால் பணிக்காக வெட்டப்பட்ட பள்ளங்களிலும் மழை நீர் தேங்கி, வடிகால் பணி தொடர முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது.அந்த பள்ளங்களில் உள்ள மழை நீரை, நீர் இறைக்கும் மோட்டார் மூலம் அங்குள்ள மாநகராட்சி குளத்திற்குள் பாய வழி செய்யலாம். அப்படிச் செய்தால், மழை நீர் குளத்தில் சேகரிக்கப்பட்டு, சாலை சேதமடைவதும் தவிர்க்கப்படும். மழை நீர் வடிகால் பணியும் விரைவாக நடக்கும் என, பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X