தங்கசாலையில் அழகானது பாரம்பரிய மணிக்கூண்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கசாலையில் அழகானது பாரம்பரிய மணிக்கூண்டு

Added : செப் 02, 2021
Share
மின்ட்--பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும் தங்கசாலை மணிக்கூண்டு கோபுரத்தை, ராயபுரம் மாநகராட்சியினர் வண்ணம் பூசி அழகுப்படுத்தி உள்ளனர்.சென்னை தங்க சாலையில் 60 அடி உயரம் கொண்ட மணிக்கூண்டு கோபுரம் உள்ளது. இந்த கடிகாரத்தை 19ம் நுாற்றாண்டில், சவுத் இந்தியா வாட்ச் கம்பெனி என அழைக்கப்படும் கனி அண்ட் சன்ஸ் உருவாக்கினர். கடிகாரத்தின் ஒவ்வொரு பக்க முகப்பும் அலுமினியத்தால்

மின்ட்--பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும் தங்கசாலை மணிக்கூண்டு கோபுரத்தை, ராயபுரம் மாநகராட்சியினர் வண்ணம் பூசி அழகுப்படுத்தி உள்ளனர்.சென்னை தங்க சாலையில் 60 அடி உயரம் கொண்ட மணிக்கூண்டு கோபுரம் உள்ளது. இந்த கடிகாரத்தை 19ம் நுாற்றாண்டில், சவுத் இந்தியா வாட்ச் கம்பெனி என அழைக்கப்படும் கனி அண்ட் சன்ஸ் உருவாக்கினர். கடிகாரத்தின் ஒவ்வொரு பக்க முகப்பும் அலுமினியத்தால் ஆனது.இந்த கடிகாரம் பல ஆண்டுகள் இயங்காமல் இருந்ததால், சென்னை மாநகராட்சி 2014 ஜனவரியில், பி.ஆர்., அண்ட் சன்ஸ் உடன் இணைந்து மணிக்கூண்டை புதுப்பித்து இயக்கியது.சென்னையின் பல்வேறு பகுதிகளை மாநகராட்சியினர் ஓவியங்கள் வரைந்தும், வர்ணங்கள் தீட்டியும் அழகுப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும் மணிக்கூண்டை மாநகராட்சியினர் மீண்டும் புதுப்பித்துள்ளனர்.ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் சொக்கலிங்கம், உதவி பொறியாளர் பிரபு உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, ௧ லட்சம் ரூபாய் செலவில் வண்ணம் பூசி மணிக்கூண்டை அழகுப்படுத்தி உள்ளனர். மேலும் மணிக்கூண்டு கோபுரத்தின் கீழ்புறம் புல்தரைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், மாநகராட்சியினர் தெரிவித்தனர். ராயப்பேட்டை, டோவ்டன், புளியந்தோப்பு மணிக்கூண்டு கோபுரங்கள் வரிசையில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X