சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி, திருமண மண்டபங்களுக்கு சொத்து வரி பாக்கியால் 'சீல்'

Added : செப் 02, 2021
Share
Advertisement
ராயபுரம்--சொத்து வரி செலுத்தாத பள்ளி, திருமண மண்டபத்திற்கு மாநகராட்சியினர் 'சீல்' வைத்தனர்.சென்னை சவுகார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் இயங்கிய, ஜெயின் சமூகத்திற்கு சொந்தமான திருமண மண்டபம், 2009ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தாமல் இருந்தது. இவர்களுக்கு, தங்க சாலையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கும், 9 லட்சம் ரூபாய் வரி பாக்கி இருந்தது.இதையடுத்து, ராயபுரம் உதவி
 பள்ளி, திருமண மண்டபங்களுக்கு சொத்து வரி பாக்கியால் 'சீல்'

ராயபுரம்--சொத்து வரி செலுத்தாத பள்ளி, திருமண மண்டபத்திற்கு மாநகராட்சியினர் 'சீல்' வைத்தனர்.சென்னை சவுகார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் இயங்கிய, ஜெயின் சமூகத்திற்கு சொந்தமான திருமண மண்டபம், 2009ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தாமல் இருந்தது. இவர்களுக்கு, தங்க சாலையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கும், 9 லட்சம் ரூபாய் வரி பாக்கி இருந்தது.இதையடுத்து, ராயபுரம் உதவி வருவாய் அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் அதிகாரிகள் நேற்று, இரு மண்டபத்திற்கும் 'சீல்' வைக்க சென்றனர்.அப்போது அதன் நிர்வாகிகள், இரு திருமண மண்டபத்திற்கும் சேர்த்து, 17 லட்சம் ரூபாய் செலுத்தினர். மீதி தொகையை விரைவில் செலுத்துவதாக கூறினர். இதையடுத்து, வருவாய் அலுவலர்கள் மண்டபங்களுக்கு 'சீல்' வைத்தனர்.அதேபோல் ராயபுரம், ஆதம் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு 5.5 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கி இருந்ததால் இதற்கும் 'சீல்' வைத்தனர்.தங்கசாலை, திருப்பள்ளி தெருவில் உள்ள தனியார் பள்ளி, 2009ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தவில்லை. இதனால் மின் இணைப்பை துண்டித்து 'சீல்' வைத்தனர்.ராயபுரம், சூரிய நாராயணன் சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி, 2019 முதல் சொத்து வரி செலுத்தவில்லை.4 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வரி பாக்கி உள்ளதால், பள்ளிக்கு 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X