பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா காலத்திலும் மாணவனுக்கு டி.சி.,; அனைவரும் பாஸ் அறிவித்தும் 10ம் வகுப்பில் தோல்வி

Added : செப் 02, 2021
Share
Advertisement
சிவகாசி: கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சிவகாசி அனுப்பங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி 10 ம் மாணவன் பிரகாஷ்க்கு தலைமையாசிரியர் மோகன் கட்டாய டி.சி., (மாற்று சான்று) வழங்கியதோடு, அனைவரும் பாஸ் அறிவிப்பிலும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டதால் மாணவர் மன அழுத்தத்தில் உள்ளதாக, அவரது தாயார் முருகம்மாள் முதன்மை கல்வி அலுவலருக்கு மனு அனுப்பியுள்ளார்.மனுவில்
 கொரோனா காலத்திலும் மாணவனுக்கு டி.சி.,; அனைவரும் பாஸ் அறிவித்தும் 10ம் வகுப்பில் தோல்வி

சிவகாசி: கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சிவகாசி அனுப்பங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி 10 ம் மாணவன் பிரகாஷ்க்கு தலைமையாசிரியர் மோகன் கட்டாய டி.சி., (மாற்று சான்று) வழங்கியதோடு, அனைவரும் பாஸ் அறிவிப்பிலும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டதால் மாணவர் மன அழுத்தத்தில் உள்ளதாக, அவரது தாயார் முருகம்மாள் முதன்மை கல்வி அலுவலருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது: அகதிகள் முகாமில் வசிக்கும் எனது மகன் பிரகாஷ் 2020 -21 கல்வியாண்டில் அனுப்பங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஜனவரியில் சில நாட்கள் பள்ளி திறந்தபோது எனது மகன் பள்ளிக்கு சரியாக செல்லவில்லை. இதற்காக பள்ளி தலைமையாசிரியர் மோகன், வலுக்கட்டாயமாக டி.சி., யை கொடுத்து விட்டார். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் படி மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் வந்து விசாரித்தார்.

அப்போது அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பிருக்கும் சூழலில் டி.சி., வழங்கியது தவறு என ,தலைமையாசிரியரை கண்டித்தார்.மறு சேர்க்கைக்கும் உத்தரவிட்டார். ஆனால் மறு சேர்க்கை செய்யவில்லை. அரசு உத்தரவால் அனைத்து மாணவர்களும் 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில், எனது மகன் தேர்ச்சி பெறவில்லை. எனது மகனையும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி தலைமையாசிரியர் மோகன்குமார்: பள்ளி திறந்த நிலையில் மாணவர் தொடர்ந்து பள்ளிக்கு வராததால் அவரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வர வற்புறுத்தினோம். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல இருப்பதால் டி.சி., யை கொடுத்து விடுங்கள் என கூறி பிப். 1 ல் வாங்கி சென்று விட்டனர்.

தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பிப்., 3 ல் பள்ளிக்கு மாணவரையும் , பெற்றோரையும் நேரில் வரவழைத்து விசாரித்தார். பள்ளியில் மீண்டும் சேர அவரும் வற்புறுத்தினார். நாங்கள் இலங்கை செல்வது உறுதியாகி விட்டதால் மீண்டும் பள்ளிக்கு வரவில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இந்நிலையில் இப்படி முரண்பாடாக குற்றம் சாட்டுகின்றனர்,என்றார்.முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி: மாவட்ட கல்வி அலுவலரிடம் மீண்டும் விசாரிக்க கூறுகிறேன். விசாரணையின் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X