பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து; கலெக்டர் ஆய்வு

Added : செப் 02, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு சூடான ஊட்டச்சத்து மதிய உணவு வழங்கப்படுவது குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.இத்திட்டத்தின் கீழ் செப் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் அனுசரிக்கப்படுகிறது. மாவட்டத்தில்

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு சூடான ஊட்டச்சத்து மதிய உணவு வழங்கப்படுவது குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தின் கீழ் செப் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் அனுசரிக்கப்படுகிறது. மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்க கூடிய அங்கன்வாடி மையங்களில் காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை திங்கள் முதல் சனி வரை தக்காளி சாதம்- முட்டை, காய்கறி கலவை சாதம் - கொண்டை கடலை அல்லது பச்சைப்பயிறு, காய்கறி புலாவ்- முட்டை, எலுமிச்சை சாதம் - முட்டை, பருப்பு சாதம்- உருளைக்கிழங்கு, கலவை சாதம் உள்ளிட்ட பல்வேறு விதமான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சூடான ஊட்டச்சத்து மதிய உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுவது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை திறந்து வைத்த அவர், விழிப்புணர்வு ஊர்வலத்தையும் துவங்கி வைத்தார்.நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் துவங்கிய ஊர்வலம் தேசபந்து மைதானத்தில் முடிந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ராஜம், மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X