சம்பவம் செய்தி

தமிழ்நாடு

16 மின் விசிறி; 22 லைட் அரசு பள்ளியில் திருட்டு

Added : செப் 02, 2021
Share
Advertisement
கண்ணகி நகர்--கண்ணகி நகர் அரசு மேல்நிலை பள்ளியில், மின் விசிறிகள், டியூப் லைட்கள் திருடிய நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கண்ணகி நகர் அரசு மேல்நிலை பள்ளி, 2004ம் ஆண்டு துவங்கியது. 1,300 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 26 வகுப்பறைகள், 35 ஆசிரியர்கள் உள்ளனர்.நேற்று பள்ளி திறக்கப்பட்டது. இதற்காக, நேற்று முன்தினம் வகுப்பறை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது, 16 மின்

கண்ணகி நகர்--கண்ணகி நகர் அரசு மேல்நிலை பள்ளியில், மின் விசிறிகள், டியூப் லைட்கள் திருடிய நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கண்ணகி நகர் அரசு மேல்நிலை பள்ளி, 2004ம் ஆண்டு துவங்கியது. 1,300 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 26 வகுப்பறைகள், 35 ஆசிரியர்கள் உள்ளனர்.நேற்று பள்ளி திறக்கப்பட்டது. இதற்காக, நேற்று முன்தினம் வகுப்பறை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது, 16 மின் விசிறிகள், 22 டியூப் லைட்கள் திருடு போனது தெரிந்தது.பள்ளி நிர்வாகம், கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்துள்ளது. பள்ளியில் இரவு நேர காவலாளி நியமிக்க, மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர்; நடவடிக்கை இல்லை.எனவே, இனியாவது காவலாளி நியமித்து திருட்டை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X