துாய்மை பணியாளர்களுக்கு கையுறை கொடுங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களுக்கு கையுறை கொடுங்க!

Added : செப் 02, 2021
Share
திருவொற்றியூர்-சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகளில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தினசரி 175 டன் மட்கும் மற்றும் மட்காத குப்பை சேகரமாகிறது.துாய்மை பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றும் நிலையில், சிலர் கையுறை இல்லாமல் குப்பையை வாங்கி தரம்

திருவொற்றியூர்-சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகளில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தினசரி 175 டன் மட்கும் மற்றும் மட்காத குப்பை சேகரமாகிறது.துாய்மை பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றும் நிலையில், சிலர் கையுறை இல்லாமல் குப்பையை வாங்கி தரம் பிரிக்கின்றனர்.அபாயகரமான குப்பையையும், அவர்கள் கையால் பிரிக்கும் சூழல் உள்ளதால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம், துாய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை முறையாக வழங்க அறிவுறுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X