கிடப்பில் ரயில்வே சுரங்கபாதை; 50 மீ., கடக்க 2 கி.மீ.,அலைச்சல்; பரிதவிக்கும் ராஜபாளையம் மக்கள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
ராஜபாளையம் : சத்திரப்பட்டி ரோடு ரயில்வே மேம்பால பணிகள் தொடக்கத்தால் ரயில்வே நிரந்தரமாக அகற்றப்பட்டு விட்டது. மாற்றுவழியான சுரங்கப் பாதைக்கு அனுமதி கிடைத்தும் பணிகள் தொடங்காததால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர்.ராஜபாளையத்தில் மக்களின் நீண்ட நாள் கனவான சத்திரப்பட்டி மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆக. 17ல் பாதசாரிகள் பயன்படுத்தி வந்த பழைய

ராஜபாளையம் : சத்திரப்பட்டி ரோடு ரயில்வே மேம்பால பணிகள் தொடக்கத்தால் ரயில்வே நிரந்தரமாக அகற்றப்பட்டு விட்டது. மாற்றுவழியான சுரங்கப் பாதைக்கு அனுமதி கிடைத்தும் பணிகள் தொடங்காததால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர்.

ராஜபாளையத்தில் மக்களின் நீண்ட நாள் கனவான சத்திரப்பட்டி மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆக. 17ல் பாதசாரிகள் பயன்படுத்தி வந்த பழைய ரயில்வே கேட் முற்றிலும் அகற்றப்பட்டு, யாரும் ரயில்வே பாதையை குறிக்கிடாத வகையில் இரு பக்கங்களிலும் அகழி வெட்டப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி மாணவர்கள், மில் தொழிலாளர்கள், பொதுமக்கள் 50 மீட்டர் துாரம் பகுதியை கடப்பதற்கு இரண்டு கிலோமீட்டர் சுற்றி வர வேண்டியதாகிறது. இதற்கு தீர்வாக ஏற்கனவே அனுமதி பெறப்பட்டு தொடங்காமல் உள்ள டி.பி. மில்ஸ் ரோட்டிலிருந்து சண்முகர் மில் ரோட்டை இணைக்கும் 15 அடி ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பது ராஜபாளையம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X