அடாவடி நபர்கள் அட்டகாசம் பூங்காவிற்கு வருவோர் அச்சம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கொரட்டூர்-'குடி'மகன்கள் மற்றும் அடாவடி நபர்களால், மாநகராட்சி பூங்காவில் நடை பயிற்சி செய்ய வருவோர் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.சென்னை அம்பத்துார் மண்டலம் கொரட்டூர், 84வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2வது தெருவில், மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் ஆகியவை உள்ளன.இங்கு, சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பலரும் காலை, மாலை நேரத்தில் நடை

கொரட்டூர்-'குடி'மகன்கள் மற்றும் அடாவடி நபர்களால், மாநகராட்சி பூங்காவில் நடை பயிற்சி செய்ய வருவோர் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.சென்னை அம்பத்துார் மண்டலம் கொரட்டூர், 84வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2வது தெருவில், மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் ஆகியவை உள்ளன.இங்கு, சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பலரும் காலை, மாலை நேரத்தில் நடை பயிற்சிக்காக வந்து செல்வர். சிறுவர் விளையாட்டு திடல் இருப்பதால், பலரும் தங்கள் குழந்தைகளுடன் வருவது வழக்கம்.திறந்தவெளி மைதானங்களில் ஆட வேண்டிய கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டம் ஆகியவற்றை பலர், இந்த பூங்காவில் விளையாடுகின்றனர். இதனால், நடை பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், முதியோர் மீது பந்து பட்டு, அவர்களுக்கு காயம் ஏற்படுகிறது.இது தவிர மாலை நேரத்தில், 'குடி' மகன்கள் மதுபாட்டில்களுடன் தஞ்சம் அடைந்து விடுகின்றனர். அவர்களால் பூங்கா பொது கழிப்பறையாகி விடுகிறது.பூங்காவிற்கு அருகில் கொரட்டூர் காவல் நிலையம் இருந்தும், குடிமகன்களின் அட்டகாசத்தை தடுக்க போலீசார் ரோந்து வருவதில்லை.இதனால், 'குடி'மகன்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பூங்காவில் வீசப்படும் மதுபாட்டில், உணவு கழிவு உள்ளிட்ட குப்பை மட்டுமின்றி, அக்கம்பக்கத்தில் வசிப்போர் வீசும் குப்பையும் பூங்காவின் வாசலில் குவிந்துள்ளது.மாநகராட்சி பராமரிக்காததால், பூங்காவின் சுற்றுச்சூழல் சீர்கெட்டுள்ளது. இதனால், மேற்கண்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X