இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | |
Advertisement
தமிழக நிகழ்வுகள்மோதலுக்கு பயன்படுத்த ஈட்டி தயாரித்து கொடுத்தவர் கைதுஅரியாங்குப்பம் : மோதலின்போது பயன்படுத்துவதற்காக ஈட்டி தயாரித்த மூன்று மீனவர்கள் மற்றும் தயாரித்து கொடுத்த பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சுருக்கு வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக, கடந்த 28ம் தேதி வீராம்பட்டிணம் - நல்லவாடு, வம்பா கீரப்பாளையம் மீனவர்கள்
crime, roundup, murder, கிரைம், ரவுண்ட், அப், போலீஸ், கைது,


தமிழக நிகழ்வுகள்மோதலுக்கு பயன்படுத்த ஈட்டி தயாரித்து கொடுத்தவர் கைது


அரியாங்குப்பம் : மோதலின்போது பயன்படுத்துவதற்காக ஈட்டி தயாரித்த மூன்று மீனவர்கள் மற்றும் தயாரித்து கொடுத்த பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சுருக்கு வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக, கடந்த 28ம் தேதி வீராம்பட்டிணம் - நல்லவாடு, வம்பா கீரப்பாளையம் மீனவர்கள் ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டனர். மோதல் தொடர்பாக 900 மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மோதலின்போது, ஈட்டி, சுளுக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர்.

மரப்பாலம் நுாறடி சாலை, சிவா விஷ்ணு நகரில் உள்ள ஒரு பட்டறையில் ஈட்டி தயாரிப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.போலீசார் அங்கு சோதனை செய்ததில் 270 ஈட்டிகள் தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், வீராம்பட்டிணத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள், 'ஆர்டர்' கொடுத்ததன்பேரில் தயாரித்தது தெரிய வந்தது.


latest tamil news

கஞ்சா செடி வளர்ப்பு போலீசார் பறிமுதல்


காரைக்கால்-காரைக்காலில், வாட்டர் சர்வீஸ் கடையில், தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரைக்கால் திருப்பட்டினம் மேலையூர் பகுதியில் உள்ள வாட்டர் சர்வீஸ் கடையில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை, கடந்த ஆக.3ம் தேதி போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, திருப்பட்டினம் பாலாஜி நகரை சேர்ந்த ஆட்டோ ராஜா(40), தெற்கு வீதியை சேர்ந்த அஜீத்(36), நாகப்பட்டினத்தை சேர்ந்த அன்புராஜ்(40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


கோவிலுக்குள் புகுந்த கார் போதை டிரைவர் மீது வழக்கு


சிதம்பரம் : சிதம்பரத்தில் கோவில் சுவரை உடைத்துக் கொண்டு கார் உள்ளே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் திருப்பாடல் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். நேற்று மதியம் 3 மணியளவில் அவரது இனோவா காரை டிரைவர் குமார் 37, வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு புறப்பட்டார். காரை டிரைவர் அதிவேகமாக ஓட்டியதில், எதிரில் இருந்த செல்லியம்மன் கோவில் தெருவுக்குள் புகுந்தது. அங்கிருந்த கோவிலின் வெளிப்புற சுவர் மீது மோதி உடைத்துக் கொண்டு கார் உள்ளே புகுந்தது.குடியிருப்பு நிறைந்த பகுதியான இந்த தெருவில் யாரும் வெளியே இல்லாததால் அசம்பாவிதம் நிகழவில்லை.சிதம்பரம் நகர போலீசார், டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மின்வேலியில் சிக்கி வாலிபர் சாவு


விழுப்புரம் : மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்த வழக்கில், விவசாயிக்கு சிறை தண்டனை மற்றும் 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஏமப்பேர் காலனியைச் சேர்ந்தவர் பூங்கான் மகன் பிரபு, 29; இவர், 2019 மே 3ம் தேதி அதே கிராமத்தில் கோகுல்தாஸ், 52; என்பவரின் குத்தகை நிலத்தில் இறந்து கிடந்தார். காட்டுப்பன்றிகளுக்கு சட்டவிரோதமாக கோகுல்தாஸ் வைத்திருந்த மின்வேலியில் சிக்கி தனது மகன் பிரபு இறந்ததாக அரகண்டநல்லுார் போலீசில் பூங்கான் புகார் அளித்தார். கோகுல்தாஸ் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
'போதை' இளைஞர் கொலை; தாத்தா உட்பட மூவர் கைது


கோவை:மது பழக்கத்தால், 'டார்ச்சர்' செய்து வந்த பேரனை, தாத்தா மற்றும் நண்பர்கள் கொலை செய்தனர். கோவை, சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் முருகன், 67; தொழிலாளி. இவரது பேரன் விஜயராகவன், 27. படித்து முடித்து, வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையானார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் விஜயராகவன், அவரது அறையில் மயங்கி கிடந்தார். அவரை முருகன் மற்றும் அவரது நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கழுத்தில் காயங்கள் தென்பட்டதால், சந்தேகமடைந்த டாக்டர்கள், ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், முருகனிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்து வந்தார். பிரேத பரிசோதனையில், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.


உலக நிகழ்வுகள்தலிபான் - போராளிகள் பஞ்ஷிரில் மோதல்


புதுடில்லி:ஆப்கானிஸ்தானில், போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ஷிர் மாகாணத்தை தலிபான் படை முற்றுகையிட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஆப்கனில் உள்ள 34 மாகாணங்களில், 33 மாகாணங்களை, தலிபான் படை எதிர்ப்பு ஏதுமின்றி கைப்பற்றியது. ஆனால், என்.ஆர்.எப்., எனப்படும் தேசிய பாதுகாப்பு முன்னணியின் கட்டுப் பாட்டில் உள்ள பஞ்ஷிர் மாகாணத்தை மட்டும், கடும் எதிர்ப்பு காரணமாக, தலிபான் பயங்கரவாதிகளால் கைப்பற்ற முடியவில்லை.

அமைதிப் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அகமது மசூத், 'தலிபான் தாக்கினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்' எனவும், எச்சரித்துள்ளார். இந்நிலையில், தலிபான் படை, பஞ்ஷிர் மாகாணத்தை முற்றுகையிட்டு அதிரடி தாக்குதல் நடத்தியது. இதை எதிர்த்து என்.ஆர்.எப்., படை நடத்திய தாக்குதலில், தலிபான் படையினர் எட்டு பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிக அளவிலான தலிபான் படையினர், பஞ்ஷிர் மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அம்மாகாணத்திற்கான தொலைதொடர்பு, இணைய வசதி ஆகியவற்றை தலிபான் துண்டித்துள்ளது. இதையடுத்து, அங்கு இரு தரப்பிற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X