பொது செய்தி

தமிழ்நாடு

நீண்ட இடைவெளிக்கு பின் அரசு மாணவர் விடுதிகள் திறப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை-நீண்ட இடைவெளிக்குப் பின், சென்னை மாவட்டத்தில் செயல்படும் 40 அரசின் மாணவர் விடுதிகளும், நேற்று திறக்கப்பட்டன.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன.தற்போது படிப்படியாக நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், நேற்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட்டன.இதனால், சென்னை

சென்னை-நீண்ட இடைவெளிக்குப் பின், சென்னை மாவட்டத்தில் செயல்படும் 40 அரசின் மாணவர் விடுதிகளும், நேற்று திறக்கப்பட்டன.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன.தற்போது படிப்படியாக நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், நேற்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட்டன.இதனால், சென்னை மாவட்டத்தில் செயல்படும் அரசின் பள்ளி மற்றும் கல்லுாரிகளின் மாணவர் விடுதிகளும், நீண்ட இடைவெளிக்கு பின் நேற்று திறக்கப்பட்டன.இது குறித்து, மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் 14 கல்லுாரி விடுதிகளும், ஆதிதிராவிடர் நலத்துறையில் 26 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான விடுதிகளும் உள்ளன.அரசு அறிவுறுத்தல்படி அனைத்து விடுதிகளும் துாய்மைப்படுத்தப்பட்டு, நேற்று முதல் திறக்கப்பட்டன. அதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறையின் ஒன்பது ஆரம்ப பள்ளிகள் தவிர்த்து, மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X