பொது செய்தி

தமிழ்நாடு

சங்கரா கண் மருத்துவமனை நங்கநல்லுாரில் கிளை திறப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
நங்கநல்லுார்-சங்கரா கண் மருத்துவமனையின் கிளை, நங்கநல்லுார் முதல் பிரதான சாலையில் நேற்று திறக்கப்பட்டது.சென்னை, பம்மலில் சங்கரா கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன் கிளை, நங்கநல்லுார், 100 அடி சாலையில் இயங்கி வந்தது.பொதுமக்கள் வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக நங்கநல்லுார், முதல் பிரதான சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.ரோட்டரி கிளப்

நங்கநல்லுார்-சங்கரா கண் மருத்துவமனையின் கிளை, நங்கநல்லுார் முதல் பிரதான சாலையில் நேற்று திறக்கப்பட்டது.சென்னை, பம்மலில் சங்கரா கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன் கிளை, நங்கநல்லுார், 100 அடி சாலையில் இயங்கி வந்தது.பொதுமக்கள் வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக நங்கநல்லுார், முதல் பிரதான சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.ரோட்டரி கிளப் முன்னாள் மாவட்ட கவர்னர் முத்து பழனியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மருத்துவமனை கிளையை திறந்து வைத்தார்.பரிசோதனைசங்கரா கண் மருத்துவமனை செயலர் விஸ்வநாதன் கூறியதாவது:பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, சர்வதேச தரம் வாய்ந்த மற்ற கண் மருத்துவமனைகளுக்கு ஈடானது. கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக, லாப நோக்கம் இன்றி, பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறோம்.இதுவரை, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 2.5 லட்சம் அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டு உள்ளன.சங்கரா கண் மருத்துவமனையின் கிளைகள் ஒடிசா, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ளன. ரோட்டரி பங்களிப்புடன் பல இடங்களில் கண் பரிசோதனை மையங்கள் செயல்பட்டும், புதிதாக திறக்கப்பட்டும் வருகின்றன.இந்த மருத்துவமனை கிளை, 2,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. ஞாயிறு தவிர்த்து, வார நாட்கள் முழுதும் தினசரி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும்.கண் பரிசோதனை கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அனுபவமிக்க டாக்டர்களை கொண்டு இந்த கிளை செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பங்கேற்புகண் மருத்துவமனை டாக்டர் லதா பத்மநாபன் கூறியதாவது:இங்கு கண்களுக்கான முழு பரிசோதனை செய்வதோடு, கண்புரைக்கான அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. கண்ணாடிகள் பெறுவதற்கும், மருந்து மாத்திரைக்கும் தனித்தனி பிரிவுகள் உள்ளன. மேலும், கண் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில், பணி நிறைவு செய்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமச்சந்திரன், டிரஸ்டிக்களான மங்கள்சந்த், பாலசுப்பிரமணியன், மருத்துவமனை சி.இ.ஓ., விஜயலட்சுமி, நங்கநல்லுார் ரோட்டரி சங்க தலைவர் சூரியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X