தமிழ்நாடு

பள்ளி மாணவர், ஆசிரியர் பேட்டி

Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாணவர் பேட்டிஎன்ன தான் 'ஆன்-லைன்' வகுப்பு மூலம் படித்தாலும், வகுப்பறையில் அமர்ந்து படிப்பது போல் இருக்காது. பள்ளிகளை திறந்தது வரவேற்கக்கூடியது. மீண்டும் நண்பர்களை பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது.கே. அரவிந்த், பிளஸ் 2 மாணவர்,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை.***பள்ளிகளில், பல நாட்கள் கழித்து பார்க்கும் நண்பர்களுடன் பேசி பழகிட ஆசை என்றாலும், கொரோனா தொற்று
 பள்ளி மாணவர், ஆசிரியர் பேட்டி

மாணவர் பேட்டிஎன்ன தான் 'ஆன்-லைன்' வகுப்பு மூலம் படித்தாலும், வகுப்பறையில் அமர்ந்து படிப்பது போல் இருக்காது. பள்ளிகளை திறந்தது வரவேற்கக்கூடியது. மீண்டும் நண்பர்களை பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது.கே. அரவிந்த், பிளஸ் 2 மாணவர்,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை.***

பள்ளிகளில், பல நாட்கள் கழித்து பார்க்கும் நண்பர்களுடன் பேசி பழகிட ஆசை என்றாலும், கொரோனா தொற்று அச்சத்தால், முககவசம் அணிந்து, சில மீட்டர் துாரம் நின்றே பேசிக் கொள்கிறோம். மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என, நம்புகிறேன்.எஸ்.கார்த்திகேயன், 17; பிளஸ் 2 மாணவர், தனியார் பள்ளி, திருவொற்றியூர்.***

வீட்டில் இருந்தால் படிக்கவே முடியாது என்பது கடந்த ஓராண்டில் தெளிவாக புரிந்துவிட்டது. பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றால் பள்ளிக்கு சென்று படித்தாக வேண்டும். பள்ளி திறப்பு சொல்ல முடியாத மகிழ்ச்சி.அக்ஷயா, 14; பத்தாம் வகுப்பு மாணவி,நங்கநல்லுார்.***'ஆன்லைன்' வகுப்பால் கண் எரிச்சல், தலைவலி, முதுகு வலியும் ஏற்பட்டது. பெரும் மன உளைச்சலும் ஏற்பட்டது. இப்போது நண்பர்களை பார்க்க முடியும். அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு, நேரடியாக படிக்க முடிகிறது.வி.நிர்மல்குமார்; 10ம் வகுப்புசென்னை உயர்நிலை பள்ளி, கொடுங்கையூர்***

செங்குன்றம் அடுத்த அருமந்தை கிராமத்தில் இருந்து வரும், என் போன்ற மாணவியருக்கு, போதிய போக்குவரத்து வசதியும் இல்லை. 'ஆன்லைன்' வகுப்புகள் பயனுள்ளதாக இருந்தாலும், இன்டர்நெட் மற்றும் கண் பிரச்னையால் நீண்டநேரம் அதை தொடர முடிவதில்லை. பள்ளி திறப்பு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.ஜெ.வேதா, பிளஸ்2 மாணவி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,செங்குன்றம்.***

பெற்றோர் பேட்டிபிள்ளைகள் வீட்டில் 'ஆன்லைன்' வகுப்பு மூலம் படித்தாலும், மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோருக்கும் இடையூறாக உள்ளது. அதேநேரத்தில், பள்ளிக்கு நேரிடையாக சென்று கல்வி கற்கும்போது, பிள்ளைகளின் கல்வி மேம்படும். நன்றாகவும் படிப்பர்.பி. சுந்தரபாண்டியன், 50,பெருங்களத்துார்.***பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவதால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என காத்திருந்தோம். பள்ளிகளுக்கு சென்றால் மட்டுமே, ஆசிரியர்களுக்கு பயந்து படிப்பர். தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்பு என இருப்பதை அதிகப்படுத்தினால், இன்னும் உதவியாக இருக்கும்.வி.சுப்புலட்சுமி, 36, இல்லத்தரசிபழைய வண்ணாரப்பேட்டை***பள்ளிகளில் இடைவெளி கடைப்பிடிக்கப்படும். ஆனால், பேருந்தில் இடைவெளி என்பது இல்லை. கூட்டம் கூடும் என, கோவில்களே திறக்கப்படாத நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது பயமாக உள்ளது.-----------------------------------------------------------வி.துரை, 52; -ராமாபுரம்---------------------------------------------------

.***நீண்ட இடைவெளிக்குப்பின் பள்ளிக்கு சைக்கிளில் வந்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் மிகக்குறைந்த மாணவ - மாணவியரே வந்திருக்கிறோம். விரைவில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடம் வந்து படிக்க வேண்டும்.ஏ. தமிழ்செல்வி, 14; பத்தாம் வகுப்பு மாணவிடி.என்.எச்.பி., நகராட்சி உயர்நிலைப்பள்ளி, ஆவடி***

கடந்த ஓராண்டாக பள்ளிகள் திறக்கப்படாதது; துரதிருஷ்டவசமானது. பிள்ளைகளும் வீட்டிலேயே அடைந்து வைப்பது கொடுமையான விஷயம். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. விரைவில் அனைத்து வகுப்புகளும் திறக்க வேண்டும்.வள்ளி, 35, உள்ளகரம்.

***ஆசிரியர் பேட்டிநீண்ட நாட்களுக்கு பின் மாணவியரை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆன்லைன் வகுப்புகளில், சந்தேகங்களை உடனுக்குடன் தீர்க்க முடியாத நிலை ஏற்படுவதுண்டு. நேரடி வகுப்புகளே, மாணவ - மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்கு, முழுமையான உந்து சக்தியாக இருக்கும்.எம்.முத்துசெல்வி, விலங்கியல் ஆசிரியர்,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம்.

***'ஆன்லைன்' வகுப்பில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. பல பிரச்னைகளால், 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றனர். நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், நான் பள்ளிக்கு படிக்க செல்லும் உணர்வு ஏற்பட்டுள்ளது.எஸ்.மனோகரன், 47;- வணிகவியல் ஆசிரியர்;- அரசு ஆண்கள் மேல் நிலையப்பள்ளி, போரூர்.***பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது, பருவ வயது மாணவியருக்கு பெரும் பாதிப்பாகவே இருந்துள்ளது. பணிக்கு செல்லும் பெற்றோர் கடந்த ஓராண்டாக மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மாணவியரின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியிருந்தது. பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெரும்பாலானோர் நிம்மதி மூச்சு விடுகின்றனர். கமலா, 59; தமிழ் ஆசிரியை,ஜெயகோபால் கரோடியாஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிநங்கநல்லுார்.

***'ஆன்லைன்' கல்விக்காக, மொபைல் போன் இன்றி பல மாணவர்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டது. கொரோனா தொற்று பரவலால், உயிர் முக்கியமா; படிப்பு முக்கியமா என்றால், உயிர் தான் முக்கியம். தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது, மாணவர்களுக்கு நல்வாய்ப்பாக உள்ளது.எஸ். செந்தில்குமார், 50; ஆசிரியர்,ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி,திருவொற்றியூர்

.***பெற்றோர் பேட்டி//பிள்ளைகளின் படிப்பு வீணாகிய நிலையில், பள்ளியை திறந்தது நல்ல விஷயம். அதேநேரத்தில், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் இணைந்து, நல்ல முறையில் பாதுகாப்பு வழங்கி, கல்வி கற்று தர வேண்டும்.கே.கொளஞ்சியப்பன், 42,பம்மல்.ஆசிரியர் பேட்டிசுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய சூழல் இருப்பதால், அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பணிச்சுமை அதிகரிக்கிறது. அரசின் விதிமுறைகள் கடைப்பிடித்து, வகுப்பறைகளில் மாணவர்கள் அமர வைக்கப்படுவர். நேரடி வகுப்புகளே, மாணவ - மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்கு, முழுமையான உந்து சக்தியாக இருக்கும்.ஜி.சுப்புராஜ், 55,உதவி தலைமையாசிரியர்,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை.நீண்ட நாட்கள் கழித்து, நண்பர்களை பார்க்க போகிறோம் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு சென்று படிப்பது என்பது, உடல் நலத்திற்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.ஆர். சித்ரேஷ், பிளஸ் 2 மாணவர்,விவேகானந்தா வித்யாலயா, குரோம்பேட்டை.பெற்றோர் பேட்டிமாணவர்கள் பள்ளிக்கு வருகையில், முக்கிய வீதிகள், கடை தெருக்களில், மக்கள் கூட்டம் அதிகரிக்கும். தவிர, ஆட்டோக்களில், அதிகம் பள்ளிக் குழந்தைகளை ஏற்ற வாய்ப்புள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், இதை கவனிக்க வேண்டும். பள்ளிகள் தொற்று பரவும் மையமாக மாறி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.ஜோ.ஆரோக்கியராஜ், 47, பெற்றோர், மணலி.'ஆன்லைன் வகுப்புகளில் படித்தாலும், வழக்கமான ஆர்வத்துடன் படிக்க முடியவில்லை. இதனால், மனதளவில் சோர்வுற்றேன். இன்று, மீண்டும் பள்ளித்தோழிகளை சந்திக்க முடிந்தது, உற்சாகத்தையும் தைரியத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.இ.அஸ்வதி, பிளஸ் 2 மாணவி,சேதுபாஸ்கரா மேல்நிலை பள்ளி, புதுார், அம்பத்துார்.சிறு வயது முதல் பார்வை திறன் இழந்த என் மீது ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி, பாடங்களை சொல்லி கொடுப்பர். இன்று முதல் மீண்டும் பள்ளிக்கு வருவது, பார்வை கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.எப்.பிரவீன் லாரன்ஸ், பிளஸ் 2, பார்வை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர்,சேதுபாஸ்கரா மேல்நிலை பள்ளி, புதுார், அம்பத்துார்.'ஆன்லைன்' வகுப்புகளில் பெற்றோரின் மொபைல் போனை தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. அது எங்களுக்கு தேவையான நேரத்தில் கிடைப்பதில்லை. பள்ளி வளாகத்தில் படிக்கிற சூழல் தான் எங்களை உற்சாகப்படுத்துகிறது.வி.சங்கீதா; பிளஸ் 2 மாணவி;அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம்.ஆசிரியர் பேட்டிபள்ளி வந்த மாணவர்கள் விடுதலை பெற்ற உணர்வை பெற்றுள்ளனர். பள்ளியை விட மாணவர்களுக்கு பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை. கடந்த மாதமே பள்ளிகளை திறக்க வேண்டுமென, தமிழக ஆசிரியர் சங்கம் சார்பில், அரசுக்கு வலியுறுத்தி வந்தோம். அரசின் முடிவை வரவேற்கிறோம். பி.கே.இளமாறன்; ஆசிரியர்சென்னை உயர்நிலைப் பள்ளி, கொடுங்கையூர்ஆசிரியர் பேட்டிகொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து, பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 'ஆன்லைன்' வகுப்பை விட நேரடி வகுப்பில், உணர்ச்சிபூர்வமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியும். அறிவியலை பொறுத்தவரை செயல்முறை கல்வி முக்கியம். இதற்கு நேரடி வகுப்புகள் உதவியாக இருக்கும்.பி. கிருஷ்ணவேணி, 58;- அறிவியல் ஆசிரியர்,- அரசு ஆண்கள் மேல் நிலையப்பள்ளி, போரூர்மெக்கானிக் கடையில் வேலை செய்து, 'ஆன்லைன்' வகுப்பிற்காக மொபைல் போன் வாங்கினேன். மொபைல் போன் ரீச்சார்ஜ் செய்ய பணம் தேவைப்பட்டது. பள்ளி திறந்தது சந்தோஷமாக உள்ளது. ஆசிரியர்கள் நேரடியாக வகுப்பு எடுப்பதால், பாடங்களை நன்கு புரிந்து கொள்ள முடியும்.-----------------------------------------------ஆர்.பாண்டியராஜன்; -அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, போரூர்.

பள்ளியில் ஒன்பது, 10ம் வகுப்புகளில் 176 பேர் படிக்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக, 119 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் இட வசதி தாராளமாக உள்ளது. கொரோனா பரவல் கட்டுக்கள் வந்த பின், அனைத்து மாண-வர்களும் பள்ளி வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.நா.ராஜுபள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலர்.டி.என்.எச்.பி., நகராட்சி உயர்நிலைப்பள்ளி, ஆவடி. மாணவர்களின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பள்ளி திறப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் சந்தோஷத்தை அளித்துள்ளது. 'ஆன்-லைன்' வாயிலாக படித்தாலும், பள்ளி சென்று ஆசிரியர்கள் போதிப்பதும், மாணவ - மாணவியர் கற்பது போல இருக்காது.ஏ.நெல்லை சாந்தி, 51; இடைநிலை ஆசிரியைடி.என்.எச்.பி., நகராட்சி உயர்நிலைப்பள்ளி, ஆவடிபள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களின் உடல் நலனில், எனக்கு அதிக அக்கறை உண்டு. கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துக்கூறி தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். பள்ளி திறப்பு, மாணவர்களின் முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி தெரிகிறது.ஆர்.விஜயசாந்தி, 40; உடற்கல்வி ஆசிரியைடி.என்.எச்.பி., நகராட்சி உயர்நிலைப்பள்ளி, ஆவடி.

பொருளாதார பாதிப்பு காரணமாக, 'ஆன்-லைன்' வகுப்புகளை முழுமையாக கவனிக்க முடியவில்லை. எப்போது, பள்ளி திறப்பார்கள் என காத்திருந்தோம். இன்று சந்தோஷத்துடன் பள்ளி வந்திருக்கிறோம்.திவ்யா, 14; பத்தாம் வகுப்பு மாணவிநங்கநல்லுார்.உண்மை சொல்லப்போனால், வீட்டில் இருந்தால் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. 'ஆன்-லைன்' வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது. எதிர்காலம் குறித்த பயம் ஏற்பட்டது. பள்ளி திறந்தது சொல்ல முடியாத மகிழ்ச்சியளிக்கிறது.கனகலட்சுமி 17; பிளஸ் 2 மாணவி, நங்கநல்லுார்.பத்தாம் வகுப்பு தேர்வுக்கு நன்கு தயாராகி இருந்தோம். கொரோனாவால் தேர்வு எழுதாமல் போனது, ஏமாற்றமளித்தது. என்ன தான், 'ஆன்-லைன்' வகுப்பில் படித்தாலும், பள்ளிக்கு சென்று படிப்பதை போல் ஆகாது.மீனலோசனி, 17, பிளஸ் 2 மாணவி, நங்கநல்லுார்.

பள்ளி திறக்கப்பட்டதால், கூண்டு கிளிகளாக வீட்டில் முடங்கி இருந்த மாணவியரும் உற்சாகமாக உள்ளனர். அடுத்த, 45 நாட்களுக்கு அவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளன.டெய்சி பியூலா, 50; ஆசிரியை, ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிநங்கநல்லுார்.ஆசிரியர் பேட்டிபள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது, அனைவருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி திறந்து வகுப்பறைகளுக்கு மாணவியர் வந்தபோது, அவர்களின் முகத்தில் பூரிப்பு, சந்தோஷம், உற்சாகம் தென்பட்டது. விஸ்வநாதன், 45; கணித ஆசிரியர்,ஜெயகோபால் கரோடியாஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,நங்கநல்லுார்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
02-செப்-202112:40:49 IST Report Abuse
jayvee இது ஆப்கானிஸ்த்தினாலா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X