சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.எப்., பணம் 'ஆட்டை' போட்ட இ - சேவை மைய ஊழியர் கைது

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021
Share
Advertisement
தாம்பரம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட கணக்கில் இருந்து, 1.44 லட்சம் ரூபாய் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.திருப்பூரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன், 35. அதே பகுதியைச் சேர்ந்தவர், நாராயணன், 37.கொரோனா காரணமாக, கடந்த ஜூனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது, சென்னையில் பணிபுரிந்து வந்த இருவரும், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, திருப்பூர் மாவட்டம், முருகன்

தாம்பரம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட கணக்கில் இருந்து, 1.44 லட்சம் ரூபாய் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன், 35. அதே பகுதியைச் சேர்ந்தவர், நாராயணன், 37.கொரோனா காரணமாக, கடந்த ஜூனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது, சென்னையில் பணிபுரிந்து வந்த இருவரும், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, திருப்பூர் மாவட்டம், முருகன் பாளையம், பிரபு நகர், இரண்டாவது தெருவில், 'டிவிஸ்டர்' என்ற 'இ- - சேவை' மையம் நடத்தி வரும், விக்னேஷ், 25, என்பவரிடம் ஆதார் கார்டுகளை கொடுத்தனர்.தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர், 'இ- - பாஸ்' பெற, அவர்களின், பி.எப்., கணக்கு எண் மற்றும் நிறுவனத்தின் விபரங்களை குறிப்பிடுவது, அப்போது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

அதை பயன்படுத்தி, இருவரின் பி.எப்., கணக்கு விபரங்களையும் பெற்று, அவற்றை மாற்றி அமைத்து, அதை, தன்னுடைய வங்கி கணக்கில் பதிவேற்றியதுடன், அவர்களிடம் இருந்து, ஒரு முறை மட்டும் பயன்படுத்தும், கடவுச் சொல்லையும் விக்னேஷ் பெற்றுள்ளார்.அதன் வாயிலாக, ஜூன்., 18ல் முரளி கிருஷ்ணனின் கணக்கில் இருந்து, 1.04 லட்சம் ரூபாயையும், ஜூன், 26ல் நாராயணன் கணக்கில் இருந்து, 40 ஆயிரம் ரூபாயும் என, மொத்தம், 1.44 லட்சம் ரூபாயை விக்னேஷ் திருடியுள்ளார்.

முரளி கிருஷ்ணன் மற்றும் நாராயணன் ஆகியோர், இது குறித்து, விக்னேஷிடம் கேட்டுள்ளனர். தொடர்ந்து, விக்னேஷ் பணத்தை மீண்டும், இருவரது பி.எப்., கணக்கிற்கும் அனுப்பி உள்ளார்.

இதை அறிந்த, தாம்பரம் மண்டல, பி.எப்., அதிகாரிகள், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரை பெற்ற போலீசார், புகார் மனு ஏற்பு சான்றிதழ் மட்டும் வழங்கிய நிலையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், இழுத்தடித்து வந்தனர்.

தொடர்ந்து, தாம்பரம் பி.எப்., கமிஷனர் ஸ்ரீஜித், 35, தரப்பில், தாம்பரம் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை, 7ம் தேதி, விக்னேஷ் மீது, வழக்கு பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, ஜூலை, 16ம் தேதி வழக்கு பதிந்த தாம்பரம் போலீசார், தலைமறைவாகி இருந்த விக்னேஷை, நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X