பொது செய்தி

தமிழ்நாடு

39 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

Added : செப் 02, 2021
Share
Advertisement
மதுரை : தமிழகத்தில் இதுவரை 39 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளதாக மதுரையில் நடந்த வேளாண் வணிக துணை இயக்குனர்களுக்கான கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் போரம் சார்பில் புவிசார் குறியீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. விவசாய கல்லுாரி டீன் பால்பாண்டி வரவேற்றார். வேளாண் பல்கலை அக்ரிபிசினஸ் இயக்குனர் சிவக்குமார்

மதுரை : தமிழகத்தில் இதுவரை 39 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளதாக மதுரையில் நடந்த வேளாண் வணிக துணை இயக்குனர்களுக்கான கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் போரம் சார்பில் புவிசார் குறியீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. விவசாய கல்லுாரி டீன் பால்பாண்டி வரவேற்றார். வேளாண் பல்கலை அக்ரிபிசினஸ் இயக்குனர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

மதுரை போரம் உதவி மேலாளர் வினோத் பேசியதாவது: தமிழகத்தில் விவசாயம், உணவுப்பொருட்கள் மற்றும் கைவினை பொருட்களுக்கு அதிகமாக குறியீடு பெறப்பட்டுள்ளது. இதுவரை 39 பொருட்களுக்கு குறியீடு கிடைத்துள்ளது. எந்த இடத்தையும் மையமாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் தனித்துவம் மிக்க பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறமுடியும்.எங்கள் அமைப்பின் மூலம் 7 பொருட்களுக்கு விண்ணப்பித்துள்ளோம்.

குறியீடு பெற்ற பின் அந்த பொருட்களை வணிக ரீதியாக மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கிறோம். மாவட்டத்திற்கு 5 பொருட்களை தேர்வு செய்து அவற்றுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது என்றார். நபார்டு வங்கி மேலாளர் சக்திபாலன் சான்றிதழ் வழங்கினார்.

மதுரை போரம் சி.இ.ஓ. சிவக் குமார் நன்றி கூறினார்.புவிசார் குறியீடு பெற்ற பழநி பஞ்சாமிர்தம், கோவில்பட்டி கடலைமிட்டாய் மற்றும் மதுரை மல்லிகை அமைப்பின் உறுப்பினர்கள் தங்களது வணிக அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X