தமிழ்நாடு

'பைரோலிசிஸ்' ஆலை!: டயர், மட்காத குப்பையை எரித்து 'பர்னஸ் ஆயில்'; மாதவரம், சோழிங்கநல்லூரில் விரைவில் துவக்கம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னையில் குப்பை கழிவுகளை மறு சுழற்சி செய்யும் புதிய ஆலை அமைக்கும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று நேரில் ஆய்வு செய்தார். மட்காத பிளாஸ்டிக், டயர் ஆகியவற்றை எரித்து 'பர்னஸ் ஆயில்' தயாரிக்கும் ஆலையையும், காய்கறி கழிவுகளில் இருந்து 'காஸ்' உற்பத்தி செய்யும் ஆலையையும், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லுாரில் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அவர்
 'பைரோலிசிஸ்' ஆலை!:   டயர், மட்காத குப்பையை எரித்து 'பர்னஸ் ஆயில்'; மாதவரம், சோழிங்கநல்லூரில் விரைவில் துவக்கம்

சென்னையில் குப்பை கழிவுகளை மறு சுழற்சி செய்யும் புதிய ஆலை அமைக்கும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

மட்காத பிளாஸ்டிக், டயர் ஆகியவற்றை எரித்து 'பர்னஸ் ஆயில்' தயாரிக்கும் ஆலையையும், காய்கறி கழிவுகளில் இருந்து 'காஸ்' உற்பத்தி செய்யும் ஆலையையும், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லுாரில் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அவர் உத்தரவிட்டார்.சென்னை மாநகராட்சி பகுதிகளில், நாள் ஒன்றுக்கு 5,200 டன் குப்பை சேகரமாகிறது. இவை இரண்டாக பிரிக்கப்பட்டு, வடசென்னையில் கொடுங்கையூரிலும், தென்சென்னையில் பெருங்குடியிலும், கிடங்கில் கொட்டப்படுகிறது.பல ஆண்டுகளாக இந்த இரண்டு கிடங்குகளிலும் குப்பை கொட்டப்படுவதால், குப்பை மலை உருவாகி, பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இரண்டு கிடங்குகளில் உள்ள பல லட்சம் டன் குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் பிரித்து அப்புறப்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை மாநகராட்சி தயாரித்து வருகிறது.

மாநகராட்சி முடிவுஅடுத்த சில மாதங்களில், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, இந்த பணிகள் துவங்க உள்ளன. இதன்படி, அடுத்த மூன்றாண்டுகளில் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகள் ஒழிக்கப்பட்டு, குப்பை தேங்கியுள்ள 450 ஏக்கர் பரப்பு நிலம், அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.இதை சாத்தியப்படுத்தும் வகையில், தினசரி சேகரமாகும் குப்பையை, இந்த இரண்டு கிடங்குகளிலும் கொட்டுவதை, பெரும்பாலும் குறைக்க மாநகராட்சி முடிவு செய்தது.அதற்கு, குப்பை மறு சுழற்சி மையங்களை அதிகளவில் ஏற்படுத்துவதும், குப்பை உருவாகும் இடத்திலேயே அவற்றை மறு சுழற்சி செய்வதுமே தீர்வு என்பதால், அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி கையில் எடுத்தது.முதலில்,

'ஒரே வளாகத்தில் 100 கிலோ குப்பைக்கு மேல் உருவானால், அங்கேயே குப்பையை மறு சுழற்சி செய்ய வேண்டும். மாநகராட்சி அந்த குப்பையை பெறாது' என, அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதன் வாயிலாக, மாநகராட்சி சேகரிக்கும் குப்பை அளவு குறையும். ஆனால், இந்த திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்படவில்லை.இது ஒருபுறம் இருந்தாலும், மாநகராட்சி, தனியார் பங்களிப்புடன், குப்பை மறு சுழற்சி மையங்களை பரவலாக அமைத்து வருகிறது.கொடுங்கையூர் குப்பை கிடங்கு வளாகம், மாதவரம் சின்ன சேக்காடு ஆகிய பகுதிகளில், இதற்கான ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சோழிங்கநல்லுார் உள்ளிட்ட தென்சென்னையின் சில பகுதிகளில், புதிய ஆலைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.என்னென்ன ஆலைகள் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், கட்டட இடிபாடு கழிவுகளை மறுசுழற்சி செய்யும், 360 டன் திறன் கொண்ட ஆலை அமைக்கும் பணி, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவுற்று, செயல்பாடுகள் துவங்கும் நிலையில் உள்ளது இதே வளாகத்தில், 80 டன் திறன் கொண்ட தோட்டக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில், 40 டன் அளவிலான மரக்கழிவுகள், இளநீர் ஓடுகள் மற்றும் தேங்காய் மட்டைகள் ஆகியவை மறுசுழற்சி செய்யப்பட்டு உரங்களாகவும், நார்களாகவும் பயன்படுத்தப்படுகிறது கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கி, மீண்டும் பயன்படுத்தும் வகையில், 50 டன் திறன் கொண்ட ஆலை அமைக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்த சாம்பல்கள் மறுபயன்பாட்டிற்கு உகந்த பேவர் பிளாக்குகளாக மாற்றப்படுகின்றன

 இதே வளாகத்தில் உயிரி எரிவாயு தயாரிக்கும் இரண்டு ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆலையும், 100 டன் மட்கும் கழிவுகளை கையாளும் அளவிற்கு திறன் கொண்டுள்ளன. தனியார் பங்களிப்பில் இந்த ஆலையில் உருவாகும் எரிவாயு விற்பனை செய்யப்பட உள்ளது. விரைவில், இந்த ஆலை பயன்பாட்டிற்கு வர உள்ளது மாதவரம் சின்ன சேக்காடு பகுதியில், பிளாஸ்டிக், டயர்கள் உட்பட மறுசுழற்சி செய்ய இயலாத பொருட்களை எரியூட்டி, அவற்றில் இருந்து எரிபொருள் தயாரிக்கும், 20 டன் திறன் கொண்ட 'பைரோலிசிஸ்' ஆலை அமைக்கப்படுகிறது. இந்த ஆலை வாயிலாக பர்னஸ் ஆயில் தயாரித்து, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய மண்டலங்களில் சேகர மாகும் மட்கும் குப்பையில் இருந்து, 50 முதல் 70 டன் வரையிலான குப்பை, மாதவரத்தில் உள்ள மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, காற்றுபுகும் முறையில் பதனிடப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது இதே வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை நெருக்கி கட்டுகளாக மாற்றும், 20 டன் திறன் கொண்ட இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த இயந்திரங்கள் வாயிலாக கட்டுகளாக மாற்றப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:'குப்பையில்லா சென்னை' என்பதே நம் இலக்கு. தினசரி உருவாகும் குப்பை அளவை குறைக்க வேண்டும். அதற்காக தான் தனியார் முதலீட்டில், குப்பை மறு சுழற்சி ஆலைகள் அமைக்கப்படுகின்றன.இதன் வாயிலாக, குப்பை மறு சுழற்சி ஆகும்; சேகரமாவது குறையும்; மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும். தற்போதுள்ள ஆலைகளை தவிர்த்து, தென்சென்னை, மத்திய சென்னையில் சில பகுதிகளில், புதிய ஆலைகள் அமைக்க உத்தேசித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X