போலீஸ் செய்தி

Added : செப் 02, 2021
Share
Advertisement
32 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைதுஉசிலம்பட்டி: எஸ்.பி., தனிப்படை போலீசார் நடத்திய கஞ்சா தடுப்பு சோதனையின் போது, கீழப்புதுார் வீரமணி தனது தோட்டத்தில் பதுக்கியிருந்த 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.விவசாயி பலிமேலுார்: ஒட்டகோவில் விவசாயி பாஸ்கரன் 60. நேற்று மேலவளவில் இருந்து மேலுாருக்கு டூ வீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. புது சுக்காம்பட்டி அருகே

32 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

உசிலம்பட்டி: எஸ்.பி., தனிப்படை போலீசார் நடத்திய கஞ்சா தடுப்பு சோதனையின் போது, கீழப்புதுார் வீரமணி தனது தோட்டத்தில் பதுக்கியிருந்த 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

விவசாயி பலி

மேலுார்: ஒட்டகோவில் விவசாயி பாஸ்கரன் 60. நேற்று மேலவளவில் இருந்து மேலுாருக்கு டூ வீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. புது சுக்காம்பட்டி அருகே டூவீலர் மோதி இறந்தார்.

தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

திருமங்கலம்: கரிசல்பட்டி பாலமுருகன் 27. ஏற்கனவே திருமணமான சமத்துவபுரம் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின் மாமனார் வீட்டில் வசிக்கும் அவரை ஆடு மாடு மேய்க்க கூறினர். விரக்தியடைந்த அவர் 3 நாட்களுக்கு முன் துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். நேற்று காலை அங்கிருந்து இருந்து வெளியேறி திருமங்கலம் விமான நிலைய ரோடு ரயில்வே கிராசிங்கில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ரயில்வே கேட் அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொழிலாளி சடலமாக மீட்பு

சோழவந்தான்: திருவாலவாயநல்லுார் மீனாட்சிசுந்தரம் மகன் செல்வகுமார் 36. திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி. திருமணமாகவில்லை. கடந்தவாரம் சொந்த ஊருக்கு வந்தவர் ஆக.,30 தாய்க்கு திதி தந்துவிட்டு விரக்தியுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று மதியம் கிராம பேச்சியம்மன் கோயில் அருகே விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

3 மகன்களின் தாய் பலி

சோழவந்தான்: துவரிமான் முருகேசன். டெய்லர். இவரது மனைவி நந்தினி 29. இவர்களுக்கு 9, 7 வயதில் மகன்கள் உள்ளனர். 2 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. வீட்டில் இருந்த நந்தினிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.

292 மதுபாட்டில்கள் பறிமுதல்

நாகமலை: பெங்களூருவில் இருந்து கர்நாடகா மாநில மதுபாட்டில்களை உரிய அனுமதியின்றி லாரி மூலம் நேற்று மாலை மதுரைக்கு எடுத்துவரப்பட்டது. நாகமலை புதுக்கோட்டையில் லாரியில் இருந்து இறக்கியபோது 290 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருமண நிகழ்ச்சிக்காக 'ஆர்டர்' கொடுத்து வாங்கி வந்தது தெரிந்தது.

திருடர்கள் கைது: நகைகள் மீட்பு

மதுரை: திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லுார் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் பகலில் பூட்டிய வீடுகளில் நகை, பணம், வீட்டு உபயோக பொருட்கள் திருடு போயின. இதுதொடர்பாக பேரையூர் எஸ்.பாரைப்பட்டி ராஜாக்கனி 29, சுந்தரம் 32, சொக்கலிங்கம்புரம் தங்கப்பாண்டி 31 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6.80 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம், வீட்டு உபயோக பொருட்கள் மீட்கப்பட்டன. கைது செய்த போலீசாரை எஸ்.பி., பாஸ்கரன் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X