ரயில் முன்பதிவு மையம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் முன்பதிவு மையம் திறப்பு

Added : செப் 02, 2021
Share
சென்னை-சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலைய கட்டடத்தில், புதுப்பிக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் திறக்கப்பட்டது.தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலைய கட்டடத்தில், ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் மையத்தின் தலைமையகம், 1985ல் நிறுவப்பட்டது.தெற்கு, தென்மேற்கு மற்றும்

சென்னை-சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலைய கட்டடத்தில், புதுப்பிக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் திறக்கப்பட்டது.தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலைய கட்டடத்தில், ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் மையத்தின் தலைமையகம், 1985ல் நிறுவப்பட்டது.தெற்கு, தென்மேற்கு மற்றும் தென்மத்திய ரயில்வே கம்ப்யூட்டர் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களுடன், இம்மையம் இணைக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயில் உள்ள இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம், ரயில் நிலைய கவுன்டர் மற்றும் முன்பதிவு மையங்களில், என, தினமும் ஒன்பது லட்சத்துக்கு மேல் டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது.மேலும், வசதிகளை அதிகரிக்க, சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தின் இரண்டாவது மாடியில், 14.31 கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பத்தில், இம்மையம் புதுப்பித்து அமைக்கப்பட்டுள்ளது.புதிய மையத்தில் தரவுகள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டு, நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் துவங்கி வைத்தார்.தலைமை வணிக மேலாளர் ஜே.வினயன், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் உட்பட, அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X