பொது செய்தி

தமிழ்நாடு

அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார் பேனல்' கட்டாயம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை-'சூரிய ஒளி வாயிலாக மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் பேனல்கள் அமைக்க, உரிய இடம் ஒதுக்காத கட்டடங்கள் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால், 'சீல்' வைக்கப்படும்' என, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., அமலாக்க பிரிவு வெளியிட்ட அறிவிப்பு:உயரமான, உயரம் குறைந்த அடுக்குமாடி கட்டடங்களுக்கு, மின்சாரம், குடிநீர், கழிவு

சென்னை-'சூரிய ஒளி வாயிலாக மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் பேனல்கள் அமைக்க, உரிய இடம் ஒதுக்காத கட்டடங்கள் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால், 'சீல்' வைக்கப்படும்' என, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., அமலாக்க பிரிவு வெளியிட்ட அறிவிப்பு:உயரமான, உயரம் குறைந்த அடுக்குமாடி கட்டடங்களுக்கு, மின்சாரம், குடிநீர், கழிவு நீர் இணைப்பு பெற பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயம். இந்த சான்று பெறுவதற்கான விதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதன்படி, அடுக்குமாடி கட்டடங்களில், சூரிய சக்தி வாயிலாக, 1 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கான சோலார் பேனல்கள் அமைக்க வேண்டும். கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், இதற்கு 107 சதுர அடி இடம் விடப்பட்டு இருக்க வேண்டும்.பணி நிறைவு சான்றுக்கான கள ஆய்வின் போது, இத்தகைய இடவசதி இல்லை என்பது தெரியவந்தால், நகர், ஊரமைப்பு சட்ட விதிகளின்படி, அந்த கட்டடத்தின் மீது, 'சீல்' வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X