சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் பறிப்பு வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு

Added : செப் 02, 2021
Share
Advertisement
மதுரை : இளையாங்குடி அர்ஷத். பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில் ரூ. 10 லட்சத்துடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார். இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் அர்ஷத்தை ஆசை வார்த்தைகூறி அழைத்து வந்த பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி பணத்தை பறித்தனர். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். வசந்தி ஆக.,27 ல் கைதானார். அவர் ஜாமின் அனுமதிக்கக்கோரி மதுரை குற்றவியல்

மதுரை : இளையாங்குடி அர்ஷத். பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில் ரூ. 10 லட்சத்துடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார். இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் அர்ஷத்தை ஆசை வார்த்தைகூறி அழைத்து வந்த பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி பணத்தை பறித்தனர்.

குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். வசந்தி ஆக.,27 ல் கைதானார். அவர் ஜாமின் அனுமதிக்கக்கோரி மதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் (ஜெ.எம்.,1) நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ராஜலிங்கம் விசாரித்தார். ஜாமின் அனுமதிக்க ஆட்சேபித்து வழக்கறிஞர் முத்துக்குமார் மனு செய்தார்.

நீதிபதி செப்.,6 க்கு ஒத்திவைத்தார். வசந்தியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி குற்றப்பிரிவு போலீசார் மனு செய்தனர். இதன் மீதான விசாரணையை நீதிபதி இன்று (செப்.,2) ஒத்திவைத்து வசந்தியை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X