22.74 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

22.74 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்

Added : செப் 02, 2021
Share
சென்னை-மெட்ரோ ரயிலில், கடந்த மாதத்தில், 22.74 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.சென்னை விமான நிலையம் - விம்கோ நகர்; பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கையாக, 50 சதவீத இருக்கை வசதியுடன் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருவதையொட்டி, இந்த ரயில்களில், பயணியர்

சென்னை-மெட்ரோ ரயிலில், கடந்த மாதத்தில், 22.74 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.சென்னை விமான நிலையம் - விம்கோ நகர்; பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கையாக, 50 சதவீத இருக்கை வசதியுடன் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருவதையொட்டி, இந்த ரயில்களில், பயணியர் வருகை படிபடியாக அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில், 1 முதல், 31ம் தேதி வரை, 22.74 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதில், 27ம் தேதி மட்டும், 88ஆயிரத்து, 579 பேர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயிலில், கடந்த, ஜூன், 21ம் தேதியில் இருந்து, ஆக.,31ம் தேதி வரை, முக கவசம் அணியாதோர், 242 பேர் பிடிக்கப்பட்டு, 48 ஆயிரத்து, 400ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X