சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி தீக்குளித்து தற்கொலை கணவர், மாமியாருக்கு சிறை

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை--வரதட்சணை கொடுமையால், மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவர் மற்றும் மாமியாருக்கு, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிண்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 32. இவருக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சுகன்யா, 21, என்பவருக்கும், 2010ல் திருமணம் நடந்தது.திருமணத்தின்போது, வரதட்சணையாக, 7 சவரன் நகையும், இருசக்கர வாகனமும் மாப்பிள்ளை

சென்னை--வரதட்சணை கொடுமையால், மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவர் மற்றும் மாமியாருக்கு, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிண்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 32. இவருக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சுகன்யா, 21, என்பவருக்கும், 2010ல் திருமணம் நடந்தது.திருமணத்தின்போது, வரதட்சணையாக, 7 சவரன் நகையும், இருசக்கர வாகனமும் மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர்.இவ்வளவு வரதட்சணை, தங்களால் கொடுக்க இயலாது என, சுகன்யாவின் தந்தை மற்றும் தாய் மாமா அப்போதே தெரிவித்தனர். திருமணத்திற்குப் பின், கொஞ்சம் கொஞ்மாக வரதட்சணை பெற்றுக் கொள்வதாக மாப்பிள்ளை வீட்டார் கூறியதை அடுத்து, செஞ்சியில் திருமணம் நடந்தது.திருமணமான மூன்றாவது மாதம் முதல் வரதட்சணை கேட்டு, சுகன்யாவை, கணவர் பார்த்திபன் மற்றும் அவரது தாய் பத்மா, 50, கொடுமைப்படுத்தி வந்தனர்.இதில் மனம் உடைந்த சுகன்யா, 2012 பிப்ரவரியில், தீக்குளித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து, கிண்டி போலீசார் வழக்குப்பதிந்து, பார்த்திபன், பத்மா இருவரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்து வந்தது. போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எல்.ஸ்ரீலேகா வாதாடினார்.வழக்கை விசாரித்த நீதிபதி, பார்த்திபன், பத்மா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இருவருக்கும் தலா, 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X