சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐந்து லட்சம் ரூபாய் கையாடல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
போரூர்-அம்மா மருந்தகத்தில், 5 லட்சம் ரூபாய் கையாடல் செய்த பெண் மருந்தாளுனர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.போரூர், டிரங்க் சாலையில் அம்மா மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சென்னை மாநகராட்சி அலுவலர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் தேவராஜ், சில தினங்களுக்கு முன், அம்மா மருந்தகத்தில் 2020 -- 2021 ஆண்டிற்கான கணக்கை ஆய்வு செய்தார்.அப்போது, 10 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு

போரூர்-அம்மா மருந்தகத்தில், 5 லட்சம் ரூபாய் கையாடல் செய்த பெண் மருந்தாளுனர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.போரூர், டிரங்க் சாலையில் அம்மா மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சென்னை மாநகராட்சி அலுவலர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் தேவராஜ், சில தினங்களுக்கு முன், அம்மா மருந்தகத்தில் 2020 -- 2021 ஆண்டிற்கான கணக்கை ஆய்வு செய்தார்.அப்போது, 10 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு மருந்துகள் இருக்க வேண்டிய இடத்தில், 5 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே மருந்துகள் இருந்தன. மீதியுள்ள 5 லட்சம் ரூபாயை, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கையாடல் செய்தது தெரியவந்தது.இது குறித்த புகாரையடுத்து, போரூர் போலீசார், அம்மா மருந்தகத்தில், 5 லட்சம் ரூபாய் கையாடல் செய்த, காரம்பாக்கம், பொன்னி நகரைச் சேர்ந்த மருந்தாளுனர் சுபாஷினி, 43, கே.கே.நகர், சிவலிங்கபுரம், 13வது செக்டாரைச் சேர்ந்த உதவியாளர் கிறிஸ்டோபர், 45, ஆகிய இருவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X